TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தில் மட்டும் தமிழர்கள் அடிமைப்பட்டு கிடக்கவில்லை:சீமான் பேச்சு


கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

’’எங்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு என்ன காரணம்? நாங்கள் செய்த தவறு என்ன? அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள மக்கள் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து போராட சுதந்திரம் இருக்கிறது. அனுமதி இருக்கிறது.

அந்த நிலை இங்கு உள்ளதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத்தில் மட்டும் தமிழர்கள் அடிமைப்பட்டு கிடக்கவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை ஆஸ்திரேலிய அரசு கேட்கிறது. ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’’என்று பேசினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*