TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கணவருடன் கருத்து வேறுபாடு: விவாகரத்து கேட்கும் ரம்யா?

ramyaபிரபல தனியார் தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. இவர் பல ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இதுதவிர, சினிமா நிகழ்ச்சிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது பெரிய திரையிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ரம்யாவுக்கும், அபாரஜித் என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த இவர்களது திருமணத்தை பார்த்து அனைவரும் வியந்து போயினர்.

இதுநாள்வரை சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வில் தற்போது புயல் வீசத் தொடங்கியுள்ளது. ரம்யா-அபாரஜித் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது பிரியும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு குடும்பத்து பெரியவர்களும் இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம். மேலும், இருவருக்கும் பொதுவான நண்பர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Chinnathirai

Your email address will not be published. Required fields are marked *

*