TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ரசிகர்களுக்கு அஜித்தின் பிறந்தநாள் ட்ரீட்!

thalaஎன்னை அறிந்தால் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்தின் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அஜித் படங்களில் ஹீரோயிஸத்திற்காக அஜித்தின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு மெருகேற்றப்படுகிறதோ அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரமும் செதுக்கப்படும். அந்த வகையில் சிவா இயக்கும் இந்த படத்தில் மும்பை மாடலும் இந்தி வில்லன் நடிகருமான கபீர் சிங் வில்லனாக நடிக்கிறார்.

கிக் 2, ஜில் ஆகிய படங்களில் நடித்துள்ள கபீர் சிங்கிற்கு தென்னிந்திய மொழி படங்களுல் நடிக்கும் ஆர்வமும் அதற்கான காரணங்களும் நிறையவே இருக்கிறதாம். ‘திறமை இருந்தால் தான் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். திறமை இல்லாமல் இங்கு நிலைக்க முடியாது. அஜித்தை பார்க்கவும், தமிழ் படங்களில் நடிக்கவும் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தமிழ், தெலுங்கு திரையுலகம் தான் இவரது டார்கெட். இதற்காகவே தமிழ் தெலுங்கு மொழிகளை கற்றுவருகிறார். அஜித்துடன் நடிக்கும் படம் பற்றி கேட்டபோது ‘ உங்களைப் போலவே நானும் அஜித்துடன் நடிக்க காத்திருக்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார்.

கொல்கத்தாவில் துவங்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இரண்டாம் கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. படத்தின் ஷூட்டிங் இதுவரையிலும் துவங்காததால் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என ரசிகர்களை மகிழ்விக்கும் எந்த தகவலும் படக்குழுவிடமிருந்து இல்லாமல் இருந்தது. மே 1-ஆம் தேதி அஜித்தின் திரைப்படத்தை கொண்டாடவிருக்கும் ரசிகர்களுக்கு கபீர் சிங் கொடுத்திருக்கும் இந்த தகவல்கள் தான் ட்ரீட்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*