TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யூகன் – விமர்சனம்!

movieகதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங் என அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கமல். இசை ரஷாந்த் அர்வின், அலெக்ஸ் ப்ரேம்நாத் ஆகியோர் இசையமத்திருக்கிறார்கள்.

ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஐந்து நண்பர்கள். படத்தின் துவக்கத்திலேயே ஒவ்வொருவராக பேயால் கொல்லப்படுகின்றனர். இறந்தவர்களெல்லாம் ஒரே மாதிரி மூச்சுத் திணறியே இறந்ததால் போலிஸ் அவர்களின் நண்பர்களையே சந்தேகப்படுகிறது. ஒருபுறம் போலிஸுக்கு பயந்தும், மறுபுறம் பேய்க்கு பயந்தும் ஓடும் நண்பர்கள் யாரிடம் தப்பி யாரிடம் சிக்குகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

முதல் படம் என்பதாலும், பல வேலைகளையும் ஒரே நபர் செய்திருப்பதாலும் ஆங்காங்கே சில சறுக்கல்கள் தெரிகின்றன. கதையில் வைத்த கவனத்தை திரைக்கதையிலும் வைத்திருக்கவேண்டும். யூகிக்க முடியாத வகையில் திருப்பங்களை வைத்து கதையையே யூகிக்க முடியாத வகையில் அமைத்துவிட்டார்.

புதுமுக நடிகர்களாக இருந்தாலும் அனைவரும் பாராட்டுகளை பெறுகின்றனர். அமீர், டேவிட், ராகுல் கதாபாத்திரங்களில் நடித்துள்ள மூவரும் நீண்ட நேரம் வருவதால் மனதில் நன்றாக பதிகின்றனர். த்ரில்லர் படத்திற்கு தேவையான இசை பொருத்தமாக இருக்கிறது.

பேய்ப் படம் என்று நம்ப வைப்பதற்காக அந்த வெள்ளை மேக்-அப், வெள்ளை உடை போட்டு ஒற்றைக்கண் தெரியும் உருவத்தை உண்டாக்கியிருக்கும் இயக்குனர் பழைய டெம்ப்ளேட்டையே ஏன் ஃபாலோ செய்கிறார் என்பது புரியவில்லை. மற்றபடி கதை, கதாபாத்திரத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். திரைக்கதை மட்டும் தான் போட்ட முடிச்சுகளை தானே அவிழ்க்க மிகவும் சிரமப்படுகிறது.

யூகன் – சிரமப்படுகிறான்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Movie Review

Your email address will not be published. Required fields are marked *

*