TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சோயா பீன்ஸின் மகத்துவங்கள்

soyaஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இதில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.

பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவாக சோயா மட்டுமே உள்ளது.

பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.

சோயா பீன்ஸின் நன்மைகள்

மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது.

இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

சோயாவில் இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் “ஈ” லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.

சோயா பீன்ஸ் குழம்பு

ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பயன்கள்

பாஸ்பரஸ், புரோட்டீன் சத்து அதிகமாக இருப்பதால் விரைவில் ஜீரணமாகிவிடும்.

எலும்புகள் பலமடையும்.

உடல் எடையையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Medical

Your email address will not be published. Required fields are marked *

*