TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உள்ளே புகுந்த கமல் – அதிர்ச்சியா, மகிழ்ச்சியா

kamalவாழ்நாளில் ரஜினியையும் கமலையும் தனித்தனியாகவோ, அல்லது ஒன்றாகவோ இயக்கிவிட வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு இயக்குனருக்கும் இருக்கும். ஆனால் லிங்குசாமி வித்தியாசமானவர். இருவரையும் வைத்து படம் இயக்குகிற ஆசை அவருக்கு இருந்தாலும், இருவரையும் தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பது அவரது ஆசை. அதன் முதல் முயற்சிதான் கமல் நடிக்கும் உத்தமவில்லன்.

தயாரிப்பு திருப்பதி பிரதர்ஸ் என்று போட்டுக் கொள்ள பெரிய ஆசை கொண்டிருந்த அவரை, லேசாக அப்செட் ஆக்கிவிட்டது கமலின் ஒரு கதவடைப்பு. சென்சார் சர்டிபிகேட்டில், தயாரிப்பு என்கிற இடத்தில் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பெயர்தான் வர வேண்டும் என்று கூறிவிட்டாராம். அடிஷனலாக விளம்பரத்தில் வேண்டுமானால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் முதலாளி சுபாஷ் சந்திர போஸ் பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அவரது தாராளம், லிங்குசாமிக்கு அதிர்ச்சியா, மகிழ்ச்சியா? அதை நீங்களே சொல்லுங்க ரீடர்ஸ்…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*