TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நோர்வேயின் நிதி உதவியும் சிறீலங்காவின் தமிழின அழிப்பும்

தமிழின அழிப்புஇன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என நேற்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இன்றைய அரசியல் சதுரங்கக் காட்சிகளில் சர்வதேசத்தாலும் சிங்களத்தாலும் விடுதலைப் புலிகள் இல்லை என்றாகிவிட்ட நிலையில் நோர்வேயானது, தமிழர் இனவழிப்பைத் தொடர்ந்து செய்யும் சிறீலங்காவிற்குத் தோள்கொடுக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.

தமிழர்கள்

பர்மா, ஈரான், சீனா ஆகியவற்றின் கூட்டோடு தமிழின அழிவிற்கு நோர்வேயும் தன்னை இணைத்துள்ளது. சிறீலங்காவின் இனவெறிப் போர் வெற்றியின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் தமிழர் தாயகம் எங்கும் சிங்களச் சின்னங்களையும், பௌத்த தாதுகோபங்களையும் விதைக்கும் முயற்சிக்குப் பொருளாதார ரீதியாக நோர்வே துணை நிற்கின்றது.

சிறீலங்காவின் இராணுவக் கட்டுமான விரிவாக்கத்திற்கும் நோர்வே துணைநிற்கப் போவதைக்கூட நாம் விரைவில் எதிர்பார்க்கலாம் என ஒஸ்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் Øivind Fuglerud நோர்வேயின் முன்னனிச் செய்தி நிறுவனமான NTBற்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நோர்வே தொடர்ந்து செய்துவரும் தடுப்பு முகாம்களுக்கான நிதி உதவியே அந்தத் தடுப்பு முகாம்களைத் தக்கவைத்து தமிழினத்தின் சிறைவைப்பை நீடிப்பதற்கு உதவுகின்றது. மே 17, 2009 அன்று நோர்வேயில் இறைச்சிகளையும் குளிர்களிகளையும் உண்டு நோர்வே மக்களும், நோர்வே அரசாங்கமும் மகிழ்ந்திருந்த வேளையில் (மே 17 நோர்வேயின் தேசிய தினம்), ஆசியாவின் நீண்ட போராட்டம் ஒன்று சடுதியான பெரும் இரத்தக்களரியுடன் கொடூரமான முடிவுக்கு வந்தது.

விடுதலைப் புலிகளின் பல களநிலைத் தளபதிகளும், போராளி, மாவீரர் குடும்பங்களும், பொதுமக்களும் முல்லைத்தீவின் கடற்கரையோரத்தில் பாரிய குண்டு மழைக்குள் கொன்றொழிக்கப்பட்டனர். 20,000 ற்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டு, சரணடைந்த போராளிகள், துறைத் தலைவர்கள் கொன்றொழிக்கப்பட்டு மாபெரும் போர் விதி மீறல்கள் இடம்பெற்றன.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் “பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே” கொல்லப்பட்டனர். புலிகளால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபோது அங்கு 280,000 முதல் 300,000 மக்கள் அந்தப் பகுதிக்குள்ளிருந்தனர். கொல்லப்பட்வர்கள் போக மீதமுள்ளோர் சிறைப்ப்பிடிக்கப்பட்டு முட்கம்பிவேலிகளுக்குள் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

குடும்பங்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டன. மக்களை மீட்பதற்கான போர் என்ற பெயரிலான இனவழிப்புப் போரின் முடிவின் பின்னரும் ஆறு மாதங்களாகியும் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தப்பிக்க முயல்வோர் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். உணவு, நீர் கிடைக்காமையினால் பெரும்பாலானோர் உயிரிழக்கின்றனர்.

Times onlineன் யூலை மாத செய்தியில் வாராந்தம் குறைந்தது 1400 பேர் வரை உயிரிழப்பதாகத் தெரிவித்திருந்தது. புலிகளின் ஆதரவாளர்கள் துணை இராணுவக் குழுக்களால் சிறீலங்கா இராணுவத்திற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கைது செய்யப்படுகின்றனர். இதில் சிலர் கொல்லப்பட்டு வீசப்பட்டுள்ளனர். ஏனையோர் பற்றிய தகவல்கள் கடலில் போட்ட கற்களாக எந்தவிதத் தடயங்களுமின்றி காணாமற் போயுள்ளன.

சர்வதேச அழுத்தங்களின் பின்னர் மக்களை வீடுகள் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தது. ஆனால் ஒக்டோபர் 25ல் வெளியாகிய சிறீலங்காப் பத்திரிகையான Sunday Timesல், விடுவிக்கப்பட்டோர் பத்திரிகையாளர்கள் முன்னால் காண்பிக்கப்பட்டுப் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டதாகச் சாட்சியம் கூறியது.

அங்கு பணிபுரியும் நோர்வேஜிய நிறுவனங்களின் ஊழியர்கள் அளித்த சாட்சியத்தில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மக்கள் மேலும் பலப்படுத்தப்பட்ட மூடிய முகாம்களுக்குள் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. NRK பத்திரிகையளரான Sverre Tom Radøyற்கு வழங்கிய செவ்வியில், அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் அவர்கள், எவக்கிங் காலத்திற்குப் பின்னர் குறிப்பிபடத்தக்க ஒரு வெற்றியை சிறீலங்கா அமைதி முயற்சியில் பெற்றுள்ளதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அந்த ஒப்பந்தம் அது கையெழுத்திடப்பட்டு இரண்டு வருடத்திற்குள்ளாக அந்த ஒப்பந்தம் சிறீலங்காவால் கிழித்தெறியப்பட்டது. அதைத் தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதிப் பகுதியில் மேற்கத்தேய சக்திகள் தமது செயற்திறனற்ற இராஜதந்திரத்தின் மூலம் போரை நிறுத்தி உயிர்களைக் காப்பாற்ற எடுத்த அத்தனை முயற்சிகளும் பயனற்றுப்போயின. ஆனால் இவர்கள் முயற்சியாவது மேற்கொண்டனர். ஆனால் நோர்வேயோ ஒரு சுண்டெலி போல் மௌனமாகப் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

கொல்பவர்களிடம் எதுவும் சொல்லாமல் கொல்லப்படும் தமிழர்களிடம் தற்பாதுகாப்பு ஆயுதங்களைக்கூடக் கீழே போடும்படி சொல்லியது. இன்று மாபெரும் சர்வதேச அழுத்தம் சிறீலங்காவின் தடுப்பு முகாம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களால் அவர்களுக்கான வரிச்சலுகையை நிறுத்த முடிவு செய்துள்ள வேளயில், அமெரிக்கா சிறீலங்காவிற்கெதிராக போர்க்குற்றங்கள் மீதான விசாரணையைக் கோரியுள்ள வேளையில், நோர்வே அந்தக்காட்சிக்குள் தன்னை நுழைக்காது சிறீலங்கா மீது எந்தவிதமான விமர்சனைங்களையும் வைக்காது அமைதி காக்கின்றது.

நோர்வே சிறீலங்காவின் தமிழர்களுக்கான தடுப்பு முகாம்களுக்கான நிதி உதவிகளை ஐ.நா நிறுவனங்களினுடாக வழங்கி வருவதுடன் நோர்வேயின் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மட்டும் தங்க தடையின்றி சிறீலங்காவில் இயங்குகின்றன. சிறீலங்கா அரசாங்கம் தடுப்பு முகாம்களின் அடுத்த வருட செலவக 225 மில்லியன் டொலரை மதிப்பிட்டுள்ளது. இந்தப் பணத்தின் பெரும்பகுதி நோர்வேயூடாகவே வழங்கப்பட்டுவிடும்.

தடுப்பு முகாம்களைக் காரணம் காட்டி சர்வதேசத்திடமிருந்து இப்படியாக பணம் கொட்டும்போது, பணம் காய்க்கும் மரங்களாகத் தடுப்பு முகாம்கள் நீண்ட காலத்திற்கு தக்கவைக்கப்படும். சர்வதேசத்தின் இந்த உதவியே தடுப்பு முகாம்களைத் தொடர்ந்து சிறீலங்கா பேணக் காரணியாகிறது. சிறீலங்கவுடன் நட்புறவைப் பேணுவதற்காக, அரசியலரங்கில் புலிகளை இல்லாதொழித்து விட்டுத் தமிழர் இனவழிப்பிலும், தமிழர் தாயகப் பறிப்பிலும் துணையாளனாக நோர்வே தன்னை இணைத்துள்ளது.

தமிழர் தாயகம் அடையாளமிழந்து சிங்களமயமாதலுக்கும் துணை போகின்றது. இந்த இன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இது தற்செயலாகக் குறிப்பிடப்பட்ட ஒரு நாள் அல்ல. மண்ணிற்காகவும், தாயக விடுதலைக்காகவும், மக்களின் விடிவிற்காகவும் களமாடி வீழ்ந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை வணங்கி தமிழர் இனம் எழுச்சி கொள்ளும் ஓர் புனிதத்திருநாள் நவம்பர் 27. இந்த இசைவிழாவானது, தமிழர்கள் மீது கொள்ளப்பட்ட இனவெறி வெற்றியைப் பறை சாற்றுவதாக அந்தப் புனிதர்கள் தினத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் மீதும், தமிர்களின் போர்த்தெய்வங்களான மாவீரர்கள் மீதும் ஓர் அவமதிப்பைச் செய்வதற்குச் சிறீலங்காவிற்கு நோர்வே மக்களின் வரிப்பணம் வழிவகுக்கின்றது.

(செய்தி ஆய்வு தமிழ்நெற் உதவியுடன், சோழன்)

நன்றி: ஈழமுரசு (20.11.2009)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*