TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 31-03-2015

raasipalanமேஷம்
வெற்றிகள் வந்து சேர விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் உருவாகும். பெற்றோரின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

மிதுனம்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். சாமர்த்தியமாகச் செயல்பட்டு பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

கடகம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தர்ம காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும்.

கன்னி
வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். வங்கிச் சேமிப்பு உயரும். வியாபார முன்னேற்றம் உண்டு. பணம் பல வழியில் வந்து பையை நிரப்பும்.

துலாம்
தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வருமானத்தைப் பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.

விருச்சகம்
கேட்ட இடங்களில் உதவி கிடைத்து மகிழும் நாள். வங்கிகளில் சேமிப்பு உயரும். வருமானம் திருப்தி தரும். உறவினர் வருகை உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு
வேதனைகள் குறைய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் மனம் கோணாது நடந்து கொள்வது நல்லது. தொழில், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் சிந்தனை மேலோங்கும்.

மகரம்
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நண்பர்கள் நல்ல யோசனைகளைச் சொல்வர். தொழில் முன்னேற்றம் கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்
சுயமுயற்சியின் மூலம் சுகம் காணும் நாள். சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
குதூகலம் கூடும் நாள். நவீனப்பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*