TamilSpy

பொழுது போக்கு இணையம்…

காம வல்லூறுகளின் பாலியல் வக்கிரத்துக்குள் வடுக்கள் சுமந்த மக்கள்…

மக்கள்மக்களின் மனக்காயங்களை ஆற்றுவதற்கு சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி மக்களை ஆற்றுப்படுத்தல் என்னும் பணியின் ஆழத்தை புரியாமல் எளிமைப்படுத்தப்பட்ட வழியில் அதனை செய்யமுற்படுகின்றனர். இதன் காரணமாக பாதிப்படைந்த மக்கள் ஆறுதல் அடைவதற்குப் பதிலாக அந்த மக்கள் மத்தியில் பெரும் பண்பாட்டுச் சீரழிவுகள் ஏற்படுகின்றது. இது ஒரு ஆபத்தான நிலைமை. இந்த ஆபத்து பற்றி மக்கள் கவலை கொண்டுள்ளனர். நான் யாழ்ப்பாணத்தில் மக்களை சந்தித்த போது பலர் குறிப்பாக பல பெண்கள் பண்பாட்டுச் சீரழிவுபற்றி முறையிட்டனர்.

vanni

“அபிவிருத்திப் பணிகளை மட்டும் காட்டி தமிழ் மக்களை திருப்திப்படுத்த முடியாது

* 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்குப் பதிலாக 4 மாத காலத்திற்கான செலவுகளுக்கு உரிய கணக்கு வாக்கெடுப்புக்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இது வரவுசெலவுத்திட்டமாக முன்வைக்கப்படாமைக்குப் புதிய பாராளுமன்றத்தில் அது வைக்கப்படும் என்று காரணம் கூறப்படுகிறது. எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் தான் காரணம் எனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பிரச்சினை என்னவென்றால் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு உதவுதல் என்ற பரோபகாரம் காட்டப்படுகிறதே அன்றி போரினால் பாதிக்கப்பட்ட, நீண்ட காலமாக வாழாத தமிழ் மக்கள் பற்றிய சிந்தனை அதாவது போரால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் மீளக்கட்டி எழுப்பப்படவேண்டும். அந்த மீள் கட்டியெழுப்புகையின் ஒரு அம்சமாக அந்த மக்கள் தாமே முன்வந்து பங்கு பற்றுகின்ற வகையில் அபிவிருத்திகள் அமையவேண்டும் என்ற சிந்தனை அரசாங்கத்தின் மத்தியிலோ இன்னும் சிறப்பாகச் சொல்லப்போனால் தெற்கிலோ இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது. குறைந்த பட்சம் இப்போது நடைபெறுகின்ற அபிவிருத்திகள் தொடர்பாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துகள் ஆலோசனைகள் கூடப் பெறப்படாமலேயே இவை நடைபெறுகின்றன. இது ஒரு ஜனநாயக விரோதமான செயல்.

வடக்கு, கிழக்கிற்கு பரோபகாரம் செய்வதை விட போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமையை கணக்கில் எடுத்து திட்டங்களை வரையும் போது தான் அத்திட்டங்கள் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குபவையாக இருக்கும். இன்று முழுத் தமிழ் சமூகமே போரால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் சமூகம் தாம் உரிமையோடு வாழ வேண்டும் என்ற ஒரு நீதியான கோரிக்கையை முன்வைத்து 60 வருடங்களாக முயற்சி செய்தது. எனினும் இந்த 60 வருடங்களில் தமிழ் மக்களின் வாழ்வு அழிக்கப்பட்டது. தமிழ் மக்கள் சிறுகச் சிறுக தம் வாழ்வைக் கட்டி அமைப்பதும் பின்னர் அது நிர்மூலம் ஆக்கப்படுவதும் மீண்டும் மீண்டும் கூடு கட்டுவதும் குலைவதுமாக அவர்கள் வாழ்வு அமைந்து வந்தது. 2006 இல் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் மூலம் தமிழர்கள் பெரும் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளார்கள். அதாவது தமிழர்களின் முதுகு முறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் செயற்பட முடியாத நிலைக்கு வந்துள்ளார்கள். அதாவது இனி என்ன செய்வோம் ஏது செய்வோம் என்று தெரியாது குழப்பிப் போய் உள்ளார்கள்.

எனினும் எப்படியும் தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற விரும்பம் அவர்களிடம் காணப்படுகிறது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும் எடுக்க அவர்கள் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் படும் துன்பத்தையிட்டு முழுத் தமிழ் சமூகமும் ஆறாத சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மழைக்கு முதல் அவர்களை வெளியில் எடுத்துத் தரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இன்று 1 இலட்சம் வரையான மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்திருக்கும். மிகுதி 2 இலட்சம் மக்களும் மழைக்கு முன் உறவினர்களது வீடுகளுக்காவது அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் கிளிநொச்சி அரசாங்க அதிபர், முல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம், ஊடகவியலாளர் திசநாயகம் போன்றோர் வெகுவிரைவில் விடுதலை செய்யப்படுதல், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோருக்கும் மிக விரைவில் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை இயல்பு வாழ்வில் ஈடுபடுத்தல் போன்றவற்றைச் செய்தால் அது நிச்சயம் தமிழ் மக்களின் மனக்காயங்களை ஆற்றும்.

தமிழ் சமூகம் இன்னும் ஆறிமுடியாததால் அழிவில் இருந்து மீளக்கட்டி அமைப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்குகின்றனர். அரசாங்கமும் அதில் போதிய கவனம் எடுப்பதாக தெரியவில்லை. தமிழ் சமூகம் பல வகையிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை.

கலாசார சீரழிவு

vanni camp penkal

மக்களின் மனக்காயங்களை ஆற்றுவதற்கு சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி மக்களை ஆற்றுப்படுத்தல் என்னும் பணியின் ஆழத்தை புரியாமல் எளிமைப்படுத்தப்பட்ட வழியில் அதனை செய்யமுற்படுகின்றனர். இதன் காரணமாக பாதிப்படைந்த மக்கள் ஆறுதல் அடைவதற்குப் பதிலாக அந்த மக்கள் மத்தியில் பெரும் பண்பாட்டுச் சீரழிவுகள் ஏற்படுகின்றது. இது ஒரு ஆபத்தான நிலைமை. இந்த ஆபத்து பற்றி மக்கள் கவலை கொண்டுள்ளனர். நான் யாழ்ப்பாணத்தில் மக்களை சந்தித்த போது பலர் குறிப்பாக பல பெண்கள் பண்பாட்டுச் சீரழிவுபற்றி முறையிட்டனர். சென்ற கிழமை வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி கரிசனையோடு எழுதியுள்ளார்கள்.

சமூக பெரியோர்கள் மக்களை வழிநடத்த வேண்டிய நேரத்தில் அவர்கள் பயம், சலிப்பு போன்றவற்றால் ஒதுங்கி பேசாமல் இருக்கின்றனர். மக்களும் பேசாமல் இருப்பதால் அல்லது தமது குடும்பமும் தாமும் வாழ்ந்தால் போதும் என்று சுயநலத்துடன் இருப்பதால் தமிழ் பகுதிகளில் பெரிய சீரழிவுகள் ஏற்பட்டுவருகின்றது.

களவுகள், கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், பாடசாலை மாணவர்களிடையே மதுப்பழக்கம் என்று சீரழிவுகள் பலப்பல ஏற்படுகின்றது. கைத்தொலைபேசி பாவனை சரியான வழிப்படுத்தல் இன்மையால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. கைத்தொலைபேசித் தொடர்பால் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி கொல்லப்படும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. எங்களுடைய பிள்ளைகளே திருடர்களாகவும் மது அருந்துபவர்கனாகவும் பாலியல் தொந்தரவுகள் செய்பவர்களாகவும் உள்ளார்கள் என பெரியோர்கள் பரிதவிக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைத் தாங்கள் இழந்து விடுவோம் என்ற பயம் பெற்றோர்கள், ஆசிரியர்களை பீடித்துள்ளது. இவர்களின் உதவியோடு இப் பண்பாட்டுச் சீரழிவைத் தடுத்து நிறுத்தி பண்பாட்டு புத்துயிர்ப்பை உருவாக்கும் பண்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனை ஒரு மிக முக்கியமான பணியாகக் கருதி இதற்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிலையங்கள் மக்களை ஆற்றுப்படுத்துவனவாக, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கற்பனையை, உருவாக்குபவையாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்புபவையாக செயற்படும்.

vanni

இவ்வகையில் இந்நிலையங்களினூடாக ஏற்படும் சமூக மாற்றம் ஒரு உண்மையான நிலையான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும். அபிவிருத்தி என்பது மக்களின் மனங்களை ஆற்றுவித்து அவர்களின் பங்களிப்புடன் உருவாகும் போது தான் அது அவர்களுடையதாகும். அது அவர்களுடையதாகும் போது இளைஞர்களும் யுவதிகளும் சீரழிவில் ஈடுபடாமல் தமது பகுதிகளைத் தாம் அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுவர்.

அடுத்ததாக பெண்கள் நிலையிலும் பெரும் மாறுதல் ஏற்படுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களில் பலர் இளம் வயதினர். இவர்களை தாமே தமது காலில் நின்று தமது குடும்பத்தைப் பராமரிப்பதற்கான தொழிற் பயிற்சிகளையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்கி அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு பெண்கள் அமைச்சு பல வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மக்களை தயார்ப்படுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியினூடாகவே சிறந்த பலனை பெற முடியும். அவ்வாறில்லாமல் மக்கள் தயங்கி ஒதுங்கியிருக்க அரசாங்கம் அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுத்தால் அவை போதிய பயனைத் தரமாட்டாது. அபிவிருத்தி முயற்சிகளில் மக்கள் பங்குபற்றும் போது தான் அவ் அபிவிருத்தி முயற்சிகள் தக்க வன்மையானவையாகவும் நிலைத்திருப்பனவாகவும் மாறும்.

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் பேசாமல் ஒரு புறத்தில் இருக்க அதிகாரிகள் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இதனால் பல துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதாக மக்கள் குறைப்படுகின்றனர். தேர்தல் இன்று தெற்கில் தேர்தல் பற்றி கட்சிகள் கூடிய அக்கறை செலுத்த தொடங்கிவிட்டன. தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் அப்படியே இருக்க அது தீர்க்கப்படுவது தொடர்பாக ஆர்வம் செலுத்தப்படவில்லை.

தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதாயின் பயம், மனக்காயங்கள் என்பன நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறாமல் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மாநகர சபை, நகரசபைத் தேர்தல்கள் திணிக்கப்பட்டது. நடந்தது என்ன? யாழ். மாநகர சபையில் வெறும் 18 வீத மக்கள் மட்டுமே வாக்களிப்பில் ஈடுபட்டனர். அவர்களை விட்டு அச்சம் நீங்கவில்லை. அவர்கள் யாருடனும் கதைப்பதென்றால் கூட அங்கும் இங்கும் பார்த்து பயத்துடன் தான் கதைக்கின்றனர். இது வரை அவர்களைப் பீடித்துள்ள பயத்தை நீக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி தமிழ் மக்கள் இனி பயம் கொள்ளத்தேவையில்லை எனக் கூறியுள்ளார். எனினும் தமிழ் மக்கள் தம் பயத்தை கைவிடவில்லை. ஏனெனில், அவர்களைப் பீடித்த பயம் வெறும் சாதாரண பயம் அல்ல. மனங்களின் மிக ஆழத்துக்கு உட்சென்று விட்ட பயமாகும். அவர்கள் தாமாகவே இனி பயம் கொள்ளத் தேவையில்லை என்று நம்புகின்ற அளவிற்கு வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் சில திட்டவட்டமான நல்லெண்ண நடவடிக்கைகள் ஏற்பட வேண்டும்.

ஓர் இடத்தில் குறிப்பிடும்போது “வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் தேடித் தந்த தலைவராக விளங்கவே நான் விரும்புகின்றேன் என்றார் மகிந்த. ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பிரதான காரணம் இனப்பாகுபாடு இன ஒதுக்கல் தான். இதனாலேயே அபிவிருத்தியும் சீர்குலைந்தது. எனவே, பாகுபாடு இன ஒதுக்கல் நிலைமைகள் அடியோடு மாற்றப்பட்டு இனி இவ்வாறு இடம்பெறாது என்ற நம்பிக்கையை முதலில் மக்கள் மனங்களில் ஏற்படச் செய்யவேண்டும்.

மக்களுக்கு அபிவிருத்தி தேவைதான். ஆனால், அபிவிருத்தியைக் காட்டி அம்மக்கள் 60 வருடங்களாகக் கட்டிக்காத்து வந்த அபிலாசைகள் தீர்க்கப்படாமல் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. தேர்தலில் ஈடுபடும் கட்சிகள் தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளைப் புரிந்துகொண்டு தமிழ்த் தரப்புடன் தீர்வு பற்றிப் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வராமல் அபிவிருத்தி என்ற மாயையினூடாகத் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பயம் நீக்கப்பட்டு அவர்கள் அரசியல் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படவேண்டும். அப்போது அவர்களின் அரசியல் அபிலாசைகள் தெரியவரும். இவ்வாறு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அபிலாசைகள் பகிரப்பட்டு அந்த அபிலாசைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அப்போது தான் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் நிலையான சமாதானமும் அபிவிருத்தியும் உருவாகும். ஒரு பெண்மணி நீண்டகாலமாகவே உடல்நலக் குறைவாக இருந்து வந்தார். சுதேச வைத்தியம்,மேல்நாட்டு வைத்தியம் ஆகியவற்றை மாறிமாறி நாடிவந்தார்.

உடல் உபாதை, தலைச்சுற்றல் முதலானவற்றில் ஒன்றைக் குணப்படுத்தினால் மற்றொன்று வந்து விடும். இப்படியே அவர் நோயினால் நெடுங்காலமாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அடிக்கடி வைத்தியர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கு கையில் பணமும் தட்டுப்பாடு. குடும்பத்தில் பணக் கஷ்டம் ஒருபுறம் இவரை வாட்டிக்கொண்டிருந்தது.

திடீரென இவரின் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கிடைத்தது. அவர் வெளிநாடு சென்று சில வாரங்களிலேயே இவரின் உடல் உபாதைகள் பறந்தோடி விட்டனவாம். இதுபற்றி சுதேச வைத்தியர் ஒருவரிடம் கூறியபோது “உமது மனஅழுத்தமே எல்லா வியாதிகளுக்கும் காரணமாக இருந்துள்ளதுஎன்று அவர் தெரிவித்தாராம்!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*