TamilSpy

பொழுது போக்கு இணையம்…

காதலி மூட்டையில் பிணமாக இருந்த கொடூரம்!

kadhaliதமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி பராக்கா சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கண்ணப்பன் (62). மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு துணையாக மனைவி ஜமுனா உடனிருந்தார்.

இவர்களது மகன் தினேஷ் (25). அம்பத்தூரில் தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை செய்கிறார். வீட்டில் இவர் மட்டும் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் போர்வை, மெத்தையால் சுற்றப்பட்ட மூட்டை ஒன்றை லிப்ட் மூலம் இறக்கி கீழே கொண்டு வந்தார் தினேஷ். அதை தனது காரில் ஏற்ற முயற்சித்தார்.

பாரம் அதிகம் இருந்ததால் அவரால் தூக்க முடியவில்லை. இதனால் பக்கத்து குடியிருப்பு காவலாளியை உதவிக்கு அழைத்தார். அப்பாவுக்கு தேவைப்படும் பெட்ஷீட், துணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக அவரிடம் கூறினார்.

பின்னர், இருவரும் சேர்ந்து மூட்டையைத் தூக்கி காரின் பின் சீட்டில் வைத்தனர். அப்போது, மூட்டை திடீரென திறந்து கொண்டு ஒரு கை மட்டும் வெளியே வந்தது.

பீதியடைந்த காவலாளி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்தனர். கூட்டம் கூடுவதை அறிந்த தினேஷ், உடனே அங்கிருந்து நழுவி, தனது பைக்கில் ஏறித் தப்பினார்.

பின்பு தகவலறிந்த காவல் துறையினர் மூட்டையைப் பிரித்து பார்த்தபோது ரத்தம் உறைந்த நிலையில் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீனிவாசன் என்பவர் தன் மகள் அருணாவைக் காணவில்லை என்று வேப்பேரி காவல் நிலையத்தில் இரவு 11 மணி அளவில் புகார் செய்திருந்தார். தலைமைச் செயலக காலனியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்த்து வருவதற்காக பொலிசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பதறியடித்துக்கொண்டு அங்கு சென்ற அவர்கள், பெண்ணின் உடலைப் பார்த்ததும் கதறி அழுதனர். அது தங்கள் மகள் அருணா தான் என்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் விசாரணையில், தினேஷும், அருணாவும் காதலித்து வந்தனர். தினேஷ் போன் செய்து தனது வீட்டிற்கு வரச் சொன்னதால் அங்கு சென்ற அருணாவிற்கும், அவருக்கும் ஏற்பட்ட தகராறில் கண்ணாடி பூந்தொட்டியை எடுத்து அருணாவின் தலையில் தினேஷ் அடித்திருக்கிறார். தொட்டியின் உடைந்த கண்ணாடித் துண்டாலும் அவரைத் தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அருணா இறந்துவிட்டார்.

இதனையறிந்து பதற்றத்துடன் தினேஷ், அருணாவின் நகைகளைக் கழற்கு கவரில் வைத்து கீழே நின்ற அருணாவின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அருணா வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு வந்துள்ளார்.

விடிவதற்குள், அருணாவின் உடலை எங்காவது வீசிவிடலாம் என்று உடலை மூட்டையாகக் கட்டி காரில் ஏற்றியுள்ளார். அருணா பி.காம். முடித்துவிட்டு ஒரு கணக்குத் தணிக்கை பயிற்சி மையத்தில் ‘ஆடிட்டிங்’ பட்டயப் படிப்பு படித்து வந்துள்ளார்.

வழக்கம் போல் பயிற்சி மையத்திற்கு சென்ற அருணா வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் அருணாவை தேடியுள்ளனர்.

வீட்டருகே ஸ்கூட்டர், நகைப் பை இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து அருணாவின் பெற்றோர் புகார் கொடுத்தனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்ற தினேஷை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு பெண் பொலிஸ் கூறுகையில், தனிமை சந்திப்பு ஆபத்து, ஆண் நண்பர்களை பெண்கள் பொது இடங்களில் சந்தித்துப் பேசுவதால் பெரிய பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. தனிமையில் சந்திக்கும் போது தான் கொலை, பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.

ஆண்களை தனிமையில் சந்திப்பதை தவிர்த்தாலே 99 சதவீத பிரச்சினைகள் ஏற்படாது. தனிமையில் சந்தித்து, பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானால் முதலில் அந்த இடத்தில் இருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.

உடல் பலத்தில் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினை ஏற்பட்டால் முடிந்தவரை சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். சத்தம் போடத் தயங்கக் கூடாது.

இக்கட்டான சூழலில் எதிராளி மீது வீசிவிட்டுத் தப்பிக்க, பெண்கள் எப்போதும் ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamizhagam
 • abinaya says:

  be careful girls

  April 3, 2015 at 14:26
 • Booker says:

  Wonderful post! We are linking to this particularly great post on our
  website. Keep up the good writing.

  July 19, 2015 at 10:44
 • Chinna says:

  Good

  December 8, 2015 at 15:33

Your email address will not be published. Required fields are marked *

*