TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இடம் பெயர்ந்த அரசாங்கங்களும், நாடுகடந்த அரசும்; பாகம் 3

தமிழீழ: Pulikal.net1980 ஆவணி 31ஆம் திகதி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிறைவேற்றிய தீர்மானமான “1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று சுதந்திர தமிழீழம் உதயமாகும்” என்ற முன்ன்றிவித்தலின் பிரகாரம் லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.வைகுந்தவாசன் அவர்கள் வெளியிட்ட பூர்வாங்கத்திட்ட வரைபை தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏடான உதயசூரியன் பத்திரிகை பலவாறு ஏளனம் செய்து எள்ளிநகையாடி கட்டுரைகளை வெளியிட்டது. இவ்வாறே கூட்டணித் தலவைர்களான அமிர்தலிங்கம் ஏளனம் செய்ய ஒரு படி மேல் சென்று சிவசிதம்பரம் “இவர் விடுதலைப் போராட்ட வீர்ர் என்றால் தமிழீழப் பிரகடணத்தை தமிழீழத்திலேயே செய்தால் என்ன? பொலிஸார் என்ன பொற்காப்பா போடப் போகிறார்கள்?” என ஏளனம் செய்தார். (18,09,1981, உதயசூரியன்)

இது இவ்வாறு இருக்க தமிழீழ விடுதலைக்காக எழுச்சி பெற்ற பல்வேறுபட்ட ஆயுதக் குழுக்கள் லண்டன் பிரகடணத்தைப் பற்றித் தமது நிலைப்பாட்டை வெளியிடாமல் இருந்த வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 14,11,1981 அன்று வைகுந்த வாசன் வெளியிட்ட பூர்வாங்கத் திட்ட வரைபின் முக்கிய அம்சங்களை விமர்சிப்பதோடு இயக்கத்தின் நிலைமையை ஈழமக்களுக்கும், லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் தெளிவுப்டுத்தும் முகமாக விரிவான ஆறு பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். அதன் சாராம்சம்.

விடுதலைப் புலிகளின் அறிக்கை

நாடுகடந்த நிலையில் தற்காலிக தமிழீழ அரசை அமைக்கும் திட்டத்தை நாம் கொள்கையளவில் எதிர்க்கவில்லை. ஆனால் அது யாரால் எச்சூழ்நிலையில் எந்த இலக்கோடு அமைக்கப்பட் வேண்டும் என்பதே முக்கியமாகும். தமிழினத்தின் தலைவிதியைப் பாதிக்க்க் கூடிய அதிமுக்கய அரசியல் விவகாரங்களில் மக்களின் ஏகோபித்த ஆதரவில்லாமல் அதற்கான சூழ்நிலை எழுவதற்கு முன்னர் தன்னிச்சையாக சில நபர்கள் தமிழீழ அரசை வெளிநாட்டில் அமைக்க முயல்வது எமது சுதந்திரப் போராட்டத்தைக் கேலிக்கூத்த்தாக்கிவிடும்.

உலக அரசியல் வரலாற்றில் ஆழமான தரிசனங்களற்று ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் சிக்கலான பரிமானங்களைப் புரிந்து கொள்ளாமல் அவசரத்தில் இப்பிரகடணத்தின் நோக்கம், உள்ளடக்கம், இலக்குகள், அவற்றால் எழக்கூடிய அரசியல்த் தாக்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆராயாமலும், விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தீவிரமான செயல்த்திட்டம் எதுவும் முன்வைக்கப்படாமலும் கூட்டணித் தலைமையில் எழுந்த விரக்தியினால் வெளிநாட்டிலாவது தமிழீழத்தைப் பிரகடணம் செய்துவிடலாம் என்ற நிலைக்கு லண்டன் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவைத் தள்ளியது போலும். நாடு பெயர்ந்த அரசுகள் நிறுவப்பட்டதாக வைகுந்தவாசன் கூறும் வரலாற்று உதாரணங்கள் சீனா – டொக்டர் சண்யற்சென், இந்தியா – மகேந்திரப் பிரதாப் சிங், சுபாஷ் சந்திரபோஸ், கம்பூச்சியா – இளவரசர் சியாநூக், போன்ற உதாரணங்களை எடுத்தாயும் போது அந்நாடுகளின் வரலாற்றுச் சூழ்நிலை தேசிய விடுதலைத் தலைவர்களின் நிலைப்பாடு, பிற நாடுகளின் ஆதரவு. என்பவற்றைக் கருத்தில் கொள்ளும் போது இவ்வுதாரணங்கள் எமது இன்றைய சூழ்நிலைக்கு இணையொப்புச் செய்யமுடியாதென்றே கூறவேண்டும்.

நாடுகடந்த நிலையில் அரசைப் பிரகடணப்படுத்துவதாயின் அந்த அரசைப் பொறுப்பேற்று நடத்தும் தலைமைப் பீடத்தின் தகுதி, உரிமை, அதிகாரம் என்பவை கருத்தில் கொள்ளப்ட வேண்டும். எமது மக்களின் விடுதலைக்காக நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும், ஸ்ரீலங்காப் பாராளுமன்ற ஆட்சியமைப்பில் பங்கு கொள்ளாத்துமான ஒரு புரட்சீகர வெகுஜன விடுதலை இயக்கம் வெளிநாட்டு ஆதரவுடன் இப்படியான அரசை பிரகடணப்படுத்துவது சாலச் சிறந்த்து. ஆனால் இதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்பதே எமது நிலைப்பாடு.

கியூபா, வியட்நாம், அல்யீரியா, அங்கோலா, மொசாம்பிக், சிம்பாவே, நிக்கரகுவா போன்ற சமீபத்திய விடுதலைப் போராட்டங்கள் ஐ.நா. படைகளின் தலையீடின்றி அந்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட ஆயுதப்புரட்சிப் போராட்டத்தால் வெற்றிகண்டவை.

இன்று நடைபெறும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் எரித்திரியா, கிழக்குத்தீமோர், பாலஸ்தீனம், வட அயர்லாந்து, மேற்கு சகாரா, நமீபியா, எல்சர்வடோர். என்பவற்றில் ஐ.நா. படைகள் குறுக்கிடப் போவதில்லை என்பது திண்ணம். நடைபெற்று முடிந்த்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான தேசிய விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஐ.நா. வின் சட்ட மன்றங்களில் வழக்குத் தொடர்ந்து விடுதலை பெறலாம் என்ற கற்பனா வாத்த்தில் காலம் கழிக்கவில்லை. மக்களை அணிதிரட்டி மக்கள் சக்தியைக் கொண்ட ஆயுதப் புரட்சிப் போராட்டத்தின் மூலமே தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியும் என அவை நம்புகின்றன.

மொத்த்த்தில் பார்க்கும் போது இப்பிரகடணமானது எமது தேசிய சுதந்திரப் போராட்டத்த்தை முன்னெடுத்துச் செல்வதற்கோ, அன்றி சட்ட ஆட்சியுரிமையும், இறைமையுமுடைய ஒரு சுதந்திர அரசை அமைப்பதற்கோ உருப்படியான செயல்த்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை என்றே கூறவேண்டும். அதுமட்டுமன்றி இத்திட்டமானது எமது இயக்கம் வரித்துள்ள ஆயுதப் புரட்ட்சிப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்களைத் திசைதிருப்பி விடுவதாகவும் அமையும்.

ஐ.நா மூலம் காரியத்தைச் சாதிந்த்துவிடலாம், ஐ.நா படைகள் வந்து நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் என்ற போலி நம்பிக்கையை உருவாக்கி கற்பனாவாத்த்தில் மக்களைத் திளைக்க விட்டால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மக்களை
அணிதிரட்டுவது சாத்தியமற்றதாகிவிடும். நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் சுதந்திர தமிழீழ அரசைப் பிரகடணப்படுத்த வேண்டிய எழக்கூடும். ஆனால் அதற்கான அரசியல் வரலாற்றுச் சூழ்நிலை கனியும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும் அந்த அரசானது தமிழீழ புரட்சீகர விடுதலை சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைய வேண்டும். அந்த அரசின் செயற்திட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் பிரிமானங்களை ஆழமாக்க் கிரகித்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான புரட்சீகர செயற்திட்டத்தைக் கொண்டிருப்பது மிக அவசியம்.

ஆகவே திரு. வைகுந்தவாசனினதும், லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினது தேசப்பற்றையும், அவர்களது துணிகர விடுதலைப் பணியையும் நாம் கௌரவிக்கும் அதேவேளை இத்தகைய திட்டங்களை அவசரப்பட்டு அமுலாக்க வேண்டாமென நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அரசியற்குழு
தமிழீழ விடுதலைப்புலிகள். (மார்கழி 1981)

மேற்படி விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையானது அன்றைய காலகட்டத்தின் தாயக அரசியற் சூழல், உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றுப் படிப்பினை, அவற்றினுடய இயங்கியற் போக்கு, சர்வதேச அரசியலில் அவற்றின் பங்கு, ஐ.நா. மன்றத்தின் ஏகாதிபத்தியச் சார்பும், சுயநிர்ணயத்திற்கான தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியதான பார்வை. என்பவற்றை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டியதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீண்ட தூர அரசியற் பார்வையும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும், மிகத்துல்லியமாக எடுத்துக் காட்டியிருந்த்து.

அன்றைய காலகட்டத்தில் தமிழர் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதற்கான ஆரம்ப்ப் பணிகளே ஆரம்பிக்கப்பட்டிருந்த்து என்பது தான் உண்மை. மேலெழுந்த வாரியாகத் தனித்தமிழீழம் என்று கூறிக்கொண்டாலும் கூட மக்களிடத்தில் சுதந்திர விடுதலை பற்றிய ஆழமான தரிசணம் இருந்திருக்கவில்லை. இரத்தம் சிந்தாமல், தியாகங்கள் செய்யாமல் விடுதலை கிடைக்கப்போவதில்லை. போராட்டப் பாதையில் எழும் பயங்கரமான சோதனைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் ஆத்ம பலத்தை எமது மக்கள் பெறுவது அவசியம். உயிரிழப்பு, பொருள் இழப்பு, சிறையும் சித்திரவதையுமாக மக்கள் தாங்கொணா ஒடுக்குமுறைக்கு ஆளாக நேரிடும்போதுதான் ஒரு தேசிய இனம் சுயநிர்ணயத்திற்காக தன்னை அணிதிரட்டி ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழும் போதுதான் விடுதலை பெறமுடியும். என்பதை ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் நன்கு உணர்ந்திருந்த்து. என்பதனை இவ்அறிக்கையின் மூலம் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஆகவே தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தில் அரசமைக்கும் இரண்டாவது முயற்சியும் காலச்சூழ்நிலையின் பொருத்தப்பாடின்மையினால் அன்றைய நாளில் கைவிடப்பட்டது. ஆனால் அதற்கான காலச்சூழல் கனியும் வரையும் பொறுத்திராமல் மூன்றாவது தடவையாக மற்றுமொரு தனிநபர் தமிழீழப் பிரகடணத்தை செய்துவிட்டு தாயகத்திலிருந்து தலைமறைவானார். அவர்பற்றித் தொடர்ந்து வரும்.

வன்னியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*