TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நேற்று, இலண்டன் பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்

இலண்டனில் “கைட் பார்க் கோன்ர்” எனும் இடத்தில் ஆரம்பமான பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். தமிழர் அல்லாத வேற்று இன நண்பர்கள் பலரையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது.

கருப்பு உடை அணிந்து , கருப்புக் கொடிகளை ஏந்தி மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தினார்கள். ஊர்வலத்தின் முன்னால் தமிழர் கலைக்குழுவினர் வன்னி வதை முகாம்களின் கொடூரத்தை சித்தரிக்கும் காட்சிகளை தத்ரூபமாக நிகழ்த்திச் சென்றனர்.

மூடி மறைக்கப்பட்ட இரும்புத்திரையின் பின்னால் கொல்லப்பட்ட மக்களின் உருவப்படங்களை தாங்கிய உறவுகள் பேரணியின் முற்பகுதியில் நிறைந்து காணப்பட்டனர்.

பின்வரும் கோரிக்கைகளை பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

காணாமல்ப் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும்

முகாம்களில் வாழும் மக்கள் இயல்நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்

இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் நடைபெறும் இப்பேரணி மேற்குலக அரசுகளினாலும் ஊடகங்களினாலும் உற்று நோக்கப்படுகின்றன.

பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதி டொனி பென் , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெரமி கொபன், சைமன் ஹுஸ், கொலம்பியன் இனத்தவரும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை விரிவுரையாளர் அன்டி ஹிகின்பொட்டம், இடது சாரி சொ சலிஷ்ச கட்சியின் தேசிய அமைப்பாளர் டான் மெயர், அக்ட் நொவ் அமைப்பின் ரிம் மாட்டின் ஆகியோர் உரையாற்றினர்.

ஈழத்தமிழருக்கு நீதியானதும் நியாயமானதுமன ஒரு அரசியல் தீர்வு கிட்டும் வரை பிரித்தானியத் தமிழர்கள் உறங்கப்போவதில்லை என்ற செய்தியை உரக்க கூறி நின்கிறது இன்றைய மாபெரும் பேரணி.

தொடர்ந்தும், தமிழ் மக்களுக்கான விடிவு கிட்டும்வரை இப்படியான மக்கள் வெளிப்பாடுகள் அவசியம் எனவும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இப்பேரணி முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*