TamilSpy

பொழுது போக்கு இணையம்…

காணாமல் போன ஐ.நா. அதிகாரிகள் இருவர் சிறீலங்கா படையினரால் தடுத்து வைப்பு

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் பணியாற்றி வந்த இரு ஐ.நா.அதிகாரிகள் சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரும் தமிழர்கள் ஆவர். ஊழியர்கள் காணமல் போனதாகத் தகவல் வந்து சில நாள்கள் கழிந்த பின்னரே அவர்கள் சிறீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்கள் தெரி விக்கப்படுகின்றன, எதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது தொடர்பில் எங்களிடம் விபரங்கள் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*