TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அன்று மாத்தையா! அடுத்து கருணா! துரோகத்தை வெல்லும் ஈழம்! (ஜெகத் கஸ்பர்)

தமிழினத்தின் வரலாற்றை திரும்பிப் பார்த்தோமென்றால் எதிரிகள் நம்மை வீழ்தினார்களென்பதை விட துரோகிகளாலும், புல்லுருவிகளாலும் தோற்றோம் என்ற கசப்பான பதிவுகள் தான் அதிகம்.

“உலகில் சிறந்த மொழி தமிழ், உலகில் மோசமான இனம் தமிழ் இனம்” என உரையாடல் ஒன்றில் கவிஞர் புலமைப்பித்தன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. கருணா விடுதலை போராட்டத்தை விட்டு விலகும் சூழல் தெரிந்த நாட்களில் ஐரோப்பிய, கனடா நாடுகளின் தமிழ் வானொலிகள் என்னிடமும் கருத்து கேட்டன. அப்போது ஒரு சாமான்ய தமிழனாய் நான் சமர்ப்பித்த மன்றாட்டு என்னால் மறக்க முடியாத ஒன்று. கருணாவுக்கு அன்று என் மன்றாட்டு இது: “கருணா அவர்களே, விடுதலைப்போராட்டதில் உங்களது பங்களிப்பு அளப்பரியது, விலை மதிப்பற்றது. இன்று எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் பகையாக மாறிடாது பார்த்து கொள்ளுங்கள். அண்ணன் தம்பிகளுக்கிடையே சண்டையும், சச்சரவுகளும், சங்கடங்களும் வருவது இயல்பு தான். அதற்க்காக தயவு செய்து தாயை காட்டிக் கொடுக்காதீர்கள், சகோதரச் சண்டையில் விடுதலை என்ற நம் அன்னையை சிங்களப் பேரினவாதத்திற்கு விற்று விடாதீர்கள்” என்று மன்றாடினேன். கடவுளே பல நேரங்களில் நமது மன்றாட்டுக்களை கேட்பதில்லை, கருணாவா கேட்டுவிடப் போகிறார்?!


கருணா போலவே மாத்தையாவின் துரோகமும் நாமறிந்தது. ஆனால் கடைசியாக மாத்தையாவுக்கு என்ன நடந்ததென்பது பொதுவில் பலருக்கும் தெரியாது. நான் 2002-ம் ஆண்டு வன்னிப் பிராந்தியத்தில் சுற்றி திரிந்த நாட்களில் அறிய விரும்பியவற்றில் ஒன்று மாத்தையாவுக்கு உண்மையில் என்ன நடந்ததென்பதை. இன்று வரை அவருக்கு என்ன நடந்ததென்ற விபரம் விடுதலைப்புலிகளாலூம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை.

நான் சேகரித்த தகவல்கள், தரவுகளின்படி மாத்தையா காட்டிக் கொடுக்கும் துரோகி ஆகிவிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தபின்னரே கைது செய்யப்பட்டிருக்கிறார். வன்னிக் காடுகளுக்குள் அமைந்த ஒரு முகாமில் அவர் எவ்வித சித்திர வதைகளுக்கும் உள்ளாக்கபடாமல் கௌரவமாகவே விசாரிக்கபப்ட்டிருக்கிறார்.

இராண்டு காலம் விசாரணை நடந்திருக்கிறது. விசாரணையில் தான் செய்த துரோகங்கள் அனைத்தையும் அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். இது ஒளிப்பதிவு செய்யப்பட்டு அன்று இயக்கத்தில் இருந்த எல்லா போராளிகளுக்கும் இட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால் மாத்தையா துரோகம் செய்திருக்கமாட்டார் என்ற எண்ணம் அன்று பல போராளிகளிடையே இருந்திருக்கிறது. இராண்டு கால விசாரணைகளுக்குப் பின் அவருக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படமுன் உலகெங்கும் அந்நிலைக்கு சபிக்கப்பட்டோரிடம் கேட்கப்படுவது போல் “இறுதி ஆசை ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா?” என்று மாத்தையாவிடமும் கேட்கப்பட்டது. அதன் பின் நடந்தவை உணர்ச்சிகரமானவை மறக்க முடியாதவை.

மாத்தையா தன் இறுதி ஆசையாகக் கேட்டது, “மனைவியையும் குழந்தையையும் காண வேண்டும்” கணவனை இழந்த விதவைப் போராளி ஒருவரைத் தான் மாத்தையா மணம் புரிந்திருந்தார். அவர்களது மண வாழ்வின் கனியாக ஓர் குழந்தை. மாத்தையாவின் இறுதி ஆசையைக் கூற, நான்கு போராளிகள் அவரது மனைவியிடம் சென்றார்கள். தயங்கித் தயங்கி முதலில் மரண தண்டனைச் செய்தியை சொல்லிவிட்டு பின்னர் அவரது இறுதி ஆசையையும் கூறி, எப்போது நீங்கள் அவரை வந்து சந்திக்க விருப்பம்?. என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சலனமோ, குழப்பமோ இன்றி அந்த போராளி மனைவி சொன்னதாகக் கூறப்படும் பதிலை பல்லாயிரம் முறை நான் நினைத்துப் பாத்திருக்கிறேன். இது தான் அந்த பதில்: “குழந்தை அவருக்கும் உரியதும். இப்போதே கூட்டிச் சென்று காட்டுங்கள். நான் வருவதாக இல்லை. ஏனென்றால் நான் திருமணம் செய்தது ஒரு விடுதலைப் போராளியை துரோகியை அல்ல” மூத்த போராளி ஒருவர் இதனைக் கூறக் கேட்ட போது பனிக்கட்டிக் கத்தியால் குத்தியது போல் இருந்தது.

எதிரிகளை நம்பலாம் வெளிப்படையானவர்கள் துரோகிகள்தான் ஆபத்தானவர்கள்.

நக்கீரன்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*