TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தளபதி பதவியில் இருந்து பொன்சேகா விலகல்

பொன்சேகா: Pulikal.netசிறிலங்க அரசின் முப்படை தளபதி பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகியுள்ளார்.

இலங்கையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவதால், முப்படை தளபதி பதவியில் இருந்து பொன்சேகா விலகியதாக கூறப்படுகிறது.

பொன்சேகாவின் விலகலை அதிபர் ராஜபக்ச ஏற்றுக் கொண்டதாக சிறிலங்க அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி பி.பி.சி. இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அதிபர் ராஜபக்சவுக்கும், தளபதி பொன்சேகாவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் இருந்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவித்து வந்த நிலையில், முப்படை தளபதி பதவியில் இருந்து பொன்சேகா விலகியதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்க ராணுவ தளபதியாக பொன்சேகா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*