TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறுபான்மைக் கட்சிகளை ஒழிக்க அரசாங்கம் திட்டம்

அரசாங்கம்: Pulikal.netகடந்த திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட விசேட கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய விளக்க உரையின் ஒரு பகுதி நேற்றைய உதயனில் தலைப்புச் செய்தியாக வெளியாகியிருந்தது தெரிந்ததே. உரையின் எஞ்சிய பகுதி இன்று இங்கே பிரசுரமாகிறது.

எமது கட்சியை யாரும் “திரீ வீலர்’ கட்சி என்று கூறமுடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்ததாகப் பலமான ஒரு கட்சியாக விளங்குவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறுவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு வகையில் ஏற்புடையதுதான். ஏனெனில், கட்சிகளைச் சிதைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பறித்து எடுப்பது ஜனாதிபதியே. நாம் எமது 6 உறுப்பினர்களை ஜனாதிபதியிடம் இழந்தோம். ஐ.தே.க. 26 பேரை இழந்தது. அரசின் பெரும்பான்மை இவ்வாறு பறித்தெடுக்கப்பட்டவர்களினால்தான் ஏற்பட்டு இருக்கிறது. அதனால்தான் அரசுக்கு இன்று பெரும்பான்மைப் பலம் இல்லை என்கிறோம். எனவேதான், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தும் படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

பெரும்பான்மைப் பலம் அரசுக்கு இருக்கிறதா?
இராணுவத் தளபதி, தேர்தலுக்கான பொது வேட்பாளராக வருவாராக இருந்தால் அவருடன் நேரடியாகப் பேச்சு நடத்திய பின்பே அவருக்கு ஆதரவு அளிப்பதா, இல்லையா என்பது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கும். அதற்கு முன்பு எம்மால் இவ்விடயத்தில் உடன்பட முடியாது.

ஒரு காலத்தில் ஜனாதிபதி முறைமை இருந்தால் நல்லது என்று நம்பிய சமயமும் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. சிறுபான்மையினரையும் அவர்களின் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கே இன்று அந்த முறைமை பயன்படுத்தப்படுகிறது. தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் நோக்கம் பலவீனப்படுத்தப்பட்ட நம் அரசியலை நிமிர்த்துவதற்கே ஆகும். சிலருக்கு அரசுடன் இணைவதன் மூலம், நிமிர்த்த முடியும் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றியும் நாம் ஆராய்ந்தோம். பொதுவேட்பாளர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. அவர் இன்னும் களத்துக்கும் வரவில்லை வந்த பின் அவருடன் பேசி முடிவெடுப்பதே சிறந்தது. அதே நேரம், தற்போதைய ஜனாதிபதிதான் வெல்லுவார் என்றால் அவரை எதிர்ப்பதிலும் பயனில்லை. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நாம் அனைவருமே ஆவோம். எனவேதான், பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டியிருக்கிறது.

சிறுபான்மைக் கட்சிகளை ஒழிக்க அரசு திட்டம்
தற்போதைய ஜனாதிபதியுடன் எமக்குத் தனிப்பட்ட குரோதங்கள் எவையும் இல்லை. ஆனால் அவர் வகிக்கும் பதவி என்பது ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தைத் தொடர்ந்தும் நம்ப முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் அப்பதவி முறைமை குறித்து நாம் தீவிரமாக ஆராய்ந்தோம். அந்தப் பதவி முறைமைகளில் உள்ள குறைபாடுகளை நாம் கடந்த காலங்களில் கண்டோம். அந்த முறைமையை மாற்றுவது குறித்தும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஜனாதிபதி முறைமையின் கீழ் வரும் தற்போதைய ஜனாதிபதி தனது அதிகாரங்களைக்கொண்டு, உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தமையை நாம் மறக்க முடியாது. இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் கட்சி களை வைத்திருக்க முடியாது என்றும் சட்டம் இயற்ற முயன்றதும் இந்த ஜனாதிபதி முறைமையின் கீழேயே. சிறிய சிறுபான்மைக் கட்சிகளை ஒழித்துக்கட்டுவதே அதன் உள்நோக்கமாக இருந்தது. இதற்கு எதிராக நாம் வழக்குத் தாக்கல் செய்ததால் தான் நாம் தப்பி இருக்கிறோம். மிகப் பெரிய நிறுவனமாக உள்ள ஜனாதிபதி முறைமையை மாற்றுவதே எமது இலக்காகும். பொது வேட்பாளர் என்பது அல்ல. பொது வேட்பாளர் பற்றிய முடிவு அவருடன் பேசிய பின்பே எடுக்கப்பட முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இராணுவத் தளபதி பொது வேட்பாளராக வருகிறார் என்றவுடன் அரசுக்குப் பயம் வந்து விட்டது.

முன்னாள் இராணுவத் தளபதி பொது வேட்பாளராக வருவது பிரச்சினை என்றால் அரசு ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருக்கவேண்டும்.
நாம் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பில் சேராமல் இருந்திருந்தால் இன்றுள்ள நிலைமை ஏற்பட்டிருக்காது. அப்படி சேராதிருந்திருந்தால் எமது கட்சியின் பிரயோக வலு அரசுக்குத் தெரிய வந்திருக்காது. இதன் காரணமாக, இப்போது முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் எம்முடன் பேச்சு நடத்தி வருகிறார்கள். அரசு சம்பந்தப்பட்ட பல இரகசியமான விடயங்களை எமக்குத் தெரிவித்து, அதனை நடக்க விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எம்மிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். எம்மை அழிக்க எதிர்பார்த்திருக்கும் இவர்களின் ஒரு படையே அரசில் இருக்கிறது. நாம் அரச தரப்புடன் சேர்ந்து விட்டால், அவர்களுக் கெல்லாம் புது வாழ்வு கிடைத்துவிடும் என நம்புகிறார்கள்.

மு.காவையும் கூட்டமைப்பையும் பிரிக்க அரசு முயலும்
எமது இலக்கு எதிர்பாராத விதமாக பிழைத்து விடுமாயின் நிச்சயமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும், தமிழ் கூட்டமைப்பிலும் அரசு பிளவை ஏற்படுத்த முயலும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, எமது பிரயோக வலுவை சக்திமிக்கதாக நாம் ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
புலிகள் வெற்றியடைந்தால், தங்களுக்கு சமத்துவம், நிம்மதி கிடைக்காது என தமிழ் புத்தி ஜீவிகளும், மக்களும் அறிந் திருந்த போதிலும் புலிகளின் வெற்றி தமி ழர்களின் வெற்றியாக இருக்காது என்று தெரிந்திருந்த போதிலும்புலிகளின் தோல்வி, தமிழர்களின் தோல்வியாகிவிடும் என்பதால்தான், தமிழர்கள் புலிகளை ஆத ரித்தார்கள் என்ற கருத்தை நான் இங்கு நினைத்துப் பார்க்கின்றேன்.

அந்தவகையில் எமது முயற்சியில் தோல்வி ஏற்படுமாயின், அது நம் அனைவரினதும் தோல்வியாகி விடலாம். நாட்டில் ஜனநாயகமே சவாலுக்கு உள்ளாகி இருக்கிறது. சட்டமும், ஒழுங்கும் துஷ்பிர யோகம் செய்யப்படுகின்றன. சிறந்த ஜனநாயகத்தில் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியின் அவசியம் மறுக்கப்பட்டிருக்கிறது. எதிர்க் கட்சியை ஒழிக்க இடமளிக்க முடியாது. சகல சிறுபான்மைக் கட்சிகளும்,சிறிய கட் சிகளும் ஆபத்தான சூழ்நிலையை எதிர் நோக்கியிருக்கின்றன. எனவே, ஜனநாயகத் தைப் பாதுகாக்கவே நாம் முயற்சிக்கிறோம். அரசியலில் நிலவிய சமச்சீரற்ற போட்டித் தன்மையை நீக்கி அரசியல் சமப் படுத்தலைச் செய்வதன் மூலமே ஜனநாயக விரோத சக்திகளை முறியடிக்க முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*