TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பாகிஸ்தான் சார்பு பொன்சேகா அரச தலைவர் போட்டியிடுவதில் இந்தியா அதிருப்தி

இந்தியா: Pulikal.netபாகிஸ்தான் சார்பு கொள்கையுடைய சரத் பொன்சேகா சிறிலங்கா அரச தலைவர் போட்டியிடுவது தொடர்பில் இந்தியாவுக்கு திருப்தியில்லை என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் சரத் பொன்சேகாவின் பாகிஸ்தான் சார்பு கொள்கை பட்டவர்த்தனமான விடயம் என்றும் இவ்வாறு இறுக்கமான பாகிஸ்தான் சார்பு கொள்கையை கொண்டுள்ள சரத் பொன்சேகா அரச தலைவர் போட்டியிடுவது – அவர் தேர்தலில் வெற்றியடையலாம் என்ற ஏதுநிலை நிலவும் இன்றையைநிலையில் – இந்தியாவுக்கு அறவே பிடிக்கவில்லை என்றும் –

பொன்சேகா அரச தலைவராக வரவேண்டும் என்பதில் – இந்தியாவுக்கு எதிரான – ஜே.வி.பி. அதிக ஆர்வம் கொண்டுள்ளமை மட்டுமல்லாமல் தனது முழுமையான ஆதரவையும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளதால் –

எதிர்கால இலங்கையானது இந்தியா ஊடுருவ முடியாத – எதேட்சதிகார போக்குகொண்டதாக அமையும் என்ற அச்சம் இந்திய அரச தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா இன்றைய நிலையிலேயே இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமாகவே இருந்துவருகிறது. இதில், பாகிஸ்தான் சார்புடைய அரச தலைவரின் கீழ் ஆட்சிக்கு வருமானால், அதன்பின்னர் அதனை தட்டிக்கேட்க முடியாது என்றும் பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவுக்குள் ஊடுருவப்போகும் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற விடயமும் இந்தியாவின் மத்திய அரசுதரப்பில் பலமாக ஓதப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுஇவ்வாறு இருக்கையில், தற்போது இந்தியா சென்றுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த விடயங்களை இந்திய தரப்பு அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா: Pulikal.net

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*