TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசதலைவர் தேர்தல்: தமிழ்த்தலைமைகளின் நிலைப்பாடு என்ன?

உதயன் tamilspy.comசிறிலங்காவில் நடைபெறப்போகும் அரச தலைவர் தேர்தலில் தென்னிலங்கையின் இரு தரப்புகளிடையேயும் போட்டியை ஏற்படச்செய்துவிட்டு, அதை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை எட்டுவதற்கான பேரம் பேசுதலை அத்தரப்புகளுடன் தமிழ்த் தலைமைகள் ஆரம்பிக்கவேண்டும். தமிழர்தரப்பு வாக்குகளை நம்பியாகவேண்டிய சிங்களதேசத்தை இவ்வாறு வழிக்குகொண்டுவந்து தமது மக்களின் நியாயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

– இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் மற்றும் கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் நிலைப்பாடு, தமிழ்த்தலைமைகளின் கொள்கை ஆகியவை எவ்வாறு அமையவேண்டும் என்பவை தொடர்பாக வலியுறுத்தியுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிவரம் வருமாறு:-

விரைவில் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படு கின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் முன் னால் நான்கு வழிகள் உள்ளன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணிபுரியும் ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படலாம் என்ற எதிர் பார்ப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டே அவர் இப் படிக் குறிப்பிட்டிருக்கின்றார்.

* ஒன்று அரசுத் தரப்பில் மீண்டும் களமிறங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பது.
* இரண்டு எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத் தப்படக் கூடிய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக் களிப்பது.
* மூன்று தமிழ் மக்களின் சார்பில் ஒரு பொது வேட் பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிப்பது.
* நான்கு தேர்தலில் வாக்களிக்காமல் பகிஷ்கரிப்பது அல்லது தமது வாக்குச்சீட்டை செல்லுபடியற்றதாக்குவது.

இந்த நான்கில் ஏதோ ஒன்றைச் செய்யவேண்டும் என் பதைத் தீர்மானிக்கும் வரலாற்று வேளை தமிழர்களை நோக்கி வெகுவேகமாக வந்துகொண்டிருக்கின்றது என மனோகணேசன் சுட்டிக்காட்டுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புச் சமயத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்திலும் தெரிவிலும் சம்பந்தப்படவேண்டிய நிலைமை தமிழர் தரப்புக்கு இம்முறை வந்திருக்கின்றமை கண்கூடு.

“இலங்கை ஜனாதிபதித் தேர்தல் என்பது சிங்கள தேசத் தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு. அதில் தமிழர் தேசத்துக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை!’ என்று முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களின்போது கூறியமை போன்று இப்போது கூறிவிட்டு ஒதுங்கிவிட முடியாத நிலைமை தமி ழர் தரப்புக்கு. தமிழர்களின் தலைமைகளுக்கும் கூட.

அப்போது இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தின் தனித் துவத்தைப் பேணி, காபந்து பண்ணி, கட்டமைத்து நிற் பதற்கான அடிப்படை வலிமை பலம் தமிழர் தரப்பில் இருந்தது. அது, இப்போது தென்னிலங்கையின் ஆயுத வலிமை யினால் அடக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு விட்டது. தமிழர் தேசம் இன்று நடு வீதியில்…..!

அத்தகைய நிலையில் இருக்கும் தமிழர் தாயகத்தின் தனித்துவத்தைக் காப்பதற்கும் பேணுவதற்கும் கூட, இத்தேர்தலில் சம்பந்தப்பட்டு, தந்திரோபாயமாகக் காய்நகர்த்தி, சாணக்கியமாகக் காரியங்களைப் பார்க்கவேண்டிய கட்டாயம் தமிழர் தரப்புக்கு உண்டு. ஆயுத வலிமையில் பாதிக்கப்பட்டுச் சோர்ந்துபோய் நிற்கும் தமிழர் தரப்பைத் தூக்கி நிறுத்தி, மீள வலிமை பெறச் செய்வதற்கு உடனடிச் சாத்தியமான வழி அரசியல் பலத்தைத் துரிதமாகப் பெருக்கிக் கொள்வதுதான். அந்த உத்தியுடன்தான் உறுதியுடன்தான் காரியங்களை ஆற்றவேண்டியவர்களாகத் தமிழர்கள் இன்று உள்ளனர் என்பது அனைத்துத் தமிழர்களும் உணர்ந்த விடயம்தான்.

தமிழர்தரப்பின் முக்கியத்துவம்

ஜனாதிபதித் தேர்தலில் முதலில், அதில் போட்டியிடுகின்ற தரப்புகளுக்குத் தமிழர்களின் வாக்குகள் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியமானவை என்ற அரசியல் கள நிலைவரத்தைத் தோற்றுவிப்பதில் தமிழ்த் தலைமைகள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

தென்னிலங்கையின் பிரதான இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான போட்டியில் மக்கள் ஆதரவு அலை ஏதோ ஒரு பக்கத்துச் சார்பானதாக ஒருதலைப்பட்சமாகவே இருக்கும் என்பது முற்கூட்டியே உறுதியானால் சிறுபான்மையின ரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு குறித்து யாரும் சிந்திக்கவோ கவனத்தில் எடுக்கவோமாட்டார்கள் என்பது தெளிவு.

எனவே, தென்னிலங்கையின் பிரதான இரு வேட்பாளர்களுக்கும் இடையில் கடும் போட்டி, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுபவரால் மட்டுமே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்ற சூழ்நிலை உருவாகக்கூடியதாக வேட்பாளர் தெரிவில் சம்பந்தப்பட்ட கட்சிகளை தரப்புகளை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வழி நடத்திக் கொள்ளவேண்டும்.

அத்தகைய கடும் போட்டி நிலையை தென்னிலங்கையின் இரு வேட்பாளர்களிடையேயும் தரப்புகளிடையேயும் ஏற்படச்செய்துவிட்டு, அதை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை எட்டுவதற்கான பேரம் பேசுதலை அத்தரப்புகளுடன் தமிழ்த் தலைமைகள் ஆரம்பிக்கவேண்டும்.

இன்றைய நிலையில் இத்தகைய அரசியல் தந்திரங் கள், நுட்பமான காய் நகர்த்தல்கள் போன்றவைதான் இக் கட்டு நிலையில் சிக்கிநிற்கும் தமிழினத்தைக் காப்பாற்றி மீட்கவல்லன என்பதைத் தமிழர்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.

ஏட்டுச் சுரைக்காய் போலப் பயன்படாத கொள்கைக ளையும், கோட்பாடுகளையும் கட்டிப்பிடித்து பிரலாபித்துக் கொண்டு, சாத்தியமற்ற தத்துவங்களைப் பேசிக்கொண்டி ருப்பதில் அர்த்தமுமில்லை; பயனுமில்லை. அதேசமயம், தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கத்துக்குச் சோரம் போகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சமயோசிதமாக தந்திரமாக காய் நகர்த்துவது இன் றைய நிலையில் தமிழர் தலைமைகளின் வரலாற்றுப் பொறுப்பு.

– இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*