TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா நாடு திரும்பியதும் கோத்தபாயவுடன் வாக்குவாதம்

skபுலிகளைத் தோற்கடித்தது தொடர்பான இராணுவ இரகசியங்களை அமெரிக்க சட்ட நிறைவேற்று அமைப்புகளுக்கு வெளியிட்டு விடுவாரோ என்று அரசுத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த பயப்பீதிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த வியாழக்கிழமை பொழுது விடியும் தறு வாயில் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

புகழ்பெற்ற போர் வீரரும் இன்று வேறு நபரையும் விட அதிகமாகப் பேசப்படுபவரும் அனைவர் கவனத்தையும் அதிகமாகக் கவருபவருமான அவரது வருகையைப் படம் எடுத்து பதிவு செய்துகொள்வதற்காக புகைப்படப் பிடிப்பாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்து ஏமாந்தார்கள். அவர்களால் அவரை சற்றுப் பார்க்கவும்கூட கிடைக்கவில்லை.

இராணுவத் தலைமையகத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்துக் கொண்ட தன் பின்னர் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியின் காரியாலயத்துக்கு சரத் பொன்சேகா வந்துசேர்ந்தார். அங்கிருந்து அன்றையதினம் பிற்பகல் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் ரெலிபோனில் தொடர்பு கொண்டு ஒரு குறுகிய உரையாடலை நிகழ்த்தினார்.

அவ்வுரையாடல் இடையில் சடுதியாக முற்றுப்பெற்றது. ஜெனரல் பொன்சேகா அதிர்ச்சியுற்ற வராகக் காணப்பட்டார். அவருடைய மேல் அதிகாரி கோத்தபாயவுடன் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. இது அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக இல்லை. ஜெனரல் பொன்சேகா அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுடன் இது தொடர்புடையது. ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் நெருங்கிய உறவினர் ஒருவர் விடுதிச் சண்டை ஒன்றில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. விடுதி உரிமையாளரினால் சம்பந்தப்பட்டவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

உறவினர் விவகாரத்தால்
மேல் மட்டத்தில் குமுறல்

அடுத்தநாள் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. உரிமையாளர் தனது செல்வாக்கைப் பிரயோகித்திருக்கிறார். இந்த விடயத்தை இராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சாவிந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகள் தலைவர் மேஜர் ஜெனரல் மென் டெக்க சமரசிங்க ஆகியவர்களுக்கு அவர் முறைப்பாடு செய்துள்ளார். ஏனென்றால் அழைப்பு வந்த தொலை பேசி பனாகொடையில் உள்ள ஆட்லறி பிரிவில் உள்ள ஓர் அதிகாரியின் தொலைபேசி என்று கண்டறியப்பட்டிருந்தது. இது விடயமாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

பொன்சேகாவுடன் தொடர்புபட்டது
இந்தக் கட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி வேறு யாருக்காகவோ செயற்படுகின்றார் என்பதைப் பாதுகாப்புச் செயலாளர் அறியவந்துள்ளார். விடயம் மேலும் விகாரம் அடையாமல் தடுத்து நிலைமையைச் சமாளிக்க முனைகையில் ஜெனரல் பொன் சேகாவின் உறவினர் ஒருவருடன் தொடர்புபட்ட விடயம் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையைத் தொடர வேண்டாம். அச்சுறுத்தல் அழைப்பு சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்து விடுவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் விடயம் அத்துடன் முடிவதாக இருக்கவில்லை.

பொலிஸில் புகார்
குறித்த இராணுவ அதிகாரி ஹோமாகமைக்குப் போய் மேஜர் ஜெனரல் சவிந்திரா சில்வாவிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக முறைப்பாடு செய்திருக்கிறார். இது இராணுவம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் பொலிஸார் முறைப்பாட்டை எடுக்க மறுத்து இராணுப் பொலிஸார் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இராணுவ உயர்மட்டத்தில் இவ்வாறான முரண்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து இப்பொழுது பொலிஸார் நடுங்கத் தொடங்கி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரியின் முறைப்பாட்டை எல்லாப் பொலிஸ் நிலையங்களும் எடுக்க மறுத்து விட்டன. இறுதியாக அவர் பொலிஸ் தலைமை நிலையத்தில் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்துக்கு புகார் சென்றதன் காரணமாக என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஜனாதிபதிக்குத் தெரியவந்தது. இப்பிரச்சினையைத் தீர்த்து வைக் கும்படி பாதுபாப்புச் செயலாளருக்கு ஜனாதிபதி கூறியிருக்கிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களைக் கூறிவருவதால் அவரைப் பதவியில் இருந்து இடை நிறுத்தும் படியும் அவர் குறித்து முழு விசாரணை நடத்தும் படியும் பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதிக்கு உத்தரவுவிட்டிருக்கிறார்.

கீழ்நிலை அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதால் இராணுவத்தில் ஒழுங்கீனம் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற நிலைப்பாட்டை பாதுகாப்புச் செயலாளர் எடுத்துள்ளார். ஜெனரல் பொன் சேகா நாடு திரும்பியதும் இதுபற்றிப் பாதுகாப்புச் செயலாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இராணுவத்தின் ஒழுக்க நிலை பற்றி செயலாளர் ஜெனரல் பொன் சேகாவுக்கு எடுத்து கூறியுள்ளார். இந்தக் கட்டத்தில் வார்த்தைகள் மேலும் முற்றியதால் ஜெனரல் பொன்சேகா தொலைபேசி உரையாடலைத் துண்டித்துக் கொண்டார் என்று தெரிகிறது.

ஒக்ல ஹேமாவில் பொன்சேகா சொந்த வீட்டில் ஓய்வு எடுத்தார்
ஜெனரல் சரத்பொன்சேகா அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் கழித்து விட்டு நாடு திரும்பிய கையோடு விடயங்கள் தெரிவாகியுள்ளன.
பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள கிறீன் காட் கடந்த மாதம் முடிவடைவதாய் இருந்தது. இதனைப் புதுப்பிப்பதற்கான அவரது தனிப் பட்ட பிரயாணத்தோடு சில அதிகாரப் பூர்வ கடமைகளிலும் அவர் ஈடுபடுவதாக இருந்தார். அதிகாரபூர்வமாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்புகள் அமெரிக்க அரசினால் பின்னர் வாபஸ் பெறப்பட்டிருந்தன. இதனால் அவரது பிரயாணத்தின் தன்மை முற்றுமுழுதாக தனிப்பட்டதாக அமைந்துவிட்டது.

வாஷிங்ரனில் பௌத்த ஆலய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின் அவர் ஒக்ல ஹோமாவில் துல்சா என்ற இடத்திற்குப் பயணமானார்.
ஒக்லஹோமாவில் அவருக்கு வீடு ஒன்று இருக்கிறது. அங்கே அவரது மகள்மாரும் மருமகனும் வசிக்கிறார்கள். இலங்கை இராணுவ அதிரடிப் படையினர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள். அங்கே ஜெனரல் பொன்சேகா ஓய்வெடுத்துக் கொண்டார். அதன் பின் எல்லா விடயங்களும் வெளிப்படத் தொடங்கின.

(08.11.2009) “சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான அரசியல் விமர்சனத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு பகுதி இது

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*