TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இடம் பெயர்ந்த அரசாங்கங்களும், நாடுகடந்த அரசும்; பாகம் 2

eelataஇலங்கைத் தீவில் இன முரண்பாட்டுக்கான ஆரம்பப் படிநிலை எதுவென நோக்குகின்ற போது அது பிரித்தானிய காலணித்துவ காலாத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது எனக் கொள்ளலாம். பௌத்த மத மறுமலர்ச்சியின் தந்தை எனச் சிங்கள பௌத்தர்களால் வர்ணிக்கப்படும் அநாகரிக தர்மபாலாவின் தலைமையில் திரண்ட பௌத்த பிக்குகளுக்கு இக்காலப்பகுதியில் எழுந்த இனவாதத்தைப் பரப்புகின்ற நூலான “விகாரையினுள் ஓர் புரட்சி” (ஹிட்லரின் மெயின் காம்ப் என்ற நூலைப் போன்றது.) என்ற நூல் மேலும் இனவாதத்தைத் தூண்ட இதனை அடிப்படையாக் கொண்டு கீழ் மட்ட் சிங்கள சமூகத்தவர்கள் மத்தியில் பௌத்த மதத்தை தமிழர் எதிர்ப்புணர்வோடு கலந்து பரப்பியதன் வெளிப்பாடுதான் இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு சிங்கள அரசியல்த் தலைவர்களின் தமிழர் விரோதப் போக்கும்இ இனப்படுகொலையும் ஆரம்பமாயிற்று.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் அரசியல்த் தலைவர்களில் தமிழர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் கூட இவ் தமிழ் அரசியத் தலைவர்களை அரசியல் வாதிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது ஏனெனில் இவர்கள் யாவரும் மிகச்சிறந்த சட்ட வல்லுனர்களாகவும்இ முழுநேர வழக்கறிஞர்களாகவே இருந்தனர். அதே நோரம் பகுதிநேர அரசியல் நடத்துபவர்களாகச் செயற்பட்டு தமது சமூக கௌரவத்தை தக்கவைக்க முனைந்தார்களேயன்றி அரசியல் வாதியாக ஒருபோதும் அவர்கள் செயற்பட்டது கிடையாது..

அரசியல்வாதி என்பவன் தான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சமூகத்தினதோ, அல்லது இனத்தினதோ எதிர்கால வாழ்வு இருப்பு என்பவற்றில் நீண்ட தூரப் பார்வை உடையவர்காளாக தமது கொள்கையை வகுத்துச் செயற்படுவர். ஆனால் தமிழ் அரசியல்த் தலைவர்களிடம் தமிழினத்தின் எதிர்கால வாழ்வு பற்றிய நீண்ட தூரப் பார்வை இருந்திருக்கவில்லை. இதனால்த் தான் மிகக்குறைந்த கல்வியறிவுடைய சிங்கள அரசியல் வாதியான டி.எஸ். சேனநாயக்காவிடமும், அதன்பின் வந்த சிங்களத் தலைவர்களிடமும் இவ் சட்ட வல்லுனர்களான பகுதிநேர தமிழ் அரசியல் வாதிகள் தோற்றுப் போயினர்.

சிங்களத் தலைவர்களுடன் தமிழ்த் தலைவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களும், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளும், பௌத்த பிக்குகளின் சிம்ம கர்ச்சனையினால் காற்றில் பறந்து போயின. இவ்வாறு தமிழ் சட்ட வல்லுனர்களின் நீண்டகாலத் தொடர் தோல்வியும், காலத்துக்குக் காலம் ஏற்பட்ட இனக்கலவரம், சிங்கள மொழிச் சட்டம், தரப்படுத்தல் ஆகியனவற்றின் தாக்கம் இலங்கையின் வடகிழக்குத் தமிழர் மத்தியில் இவர்கள் மீது ஏற்பட்டுக் கொண்டிருந்த அதிருப்தியுமே தமிழர் சுய நிர்ணய உரிமை, தாயகம், தேசியம் பற்றி பேச வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திற்று என்றே சொல்லாம்.

இவ் இனமுரண்பாட்டின் இறுக்க நிலையானது சிங்கள அரசியல் வாதிகளுடன் ஒப்பந்தங்களைச் செய்தோ அல்லது பேசியோ எந்தப் பலனையும் பெறமுடியாது என்ற அவர்கள் உணர்ந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசிய வாதம் வடகிழக்கில் எழுச்சி பெற. அதன் அடுத்த நிலையான பிரிந்து வாழ்தல் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. இதன் வெளிப்பாடுதான் தமிழ்ச் சமூகத்தினதும், அக்காலகட்ட தமிழ்த் தேசிய வாதத்தின் எழுச்சியும் தமிழர் வட்டுக் கோட்டை மாநாட்டை நடத்த உந்திற்று. இம் மாநாட்டின் இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், தமிழர் சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண சுதந்திரமும், தன்னாட்சியும் கொண்ட சோசலிச தமிழீழத்தை அமைப்போம். என்ற வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத்தீர்மானமே 1977 இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்கப்பட்டு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று கூட்டணி பெரு வெற்றியீட்டியது.

வட்டுக் கோட்டைப் பிரகடணம் 1977 இல் இடம் பெற்ற தேர்தலின் மூலம் பெற்ற வெற்றியை மக்கள் ஆணையாகக் கொண்டு முதற் கட்டமாக தமிழ் ஈழத் தேசிய சபையை (National Assembly Of Tamil Eeleam) கூட்டி ஒரு தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி தமது அரசியத் தலைவிதியை நிர்ணயிக்கின்ற உரிமையைப் பிரயேகித்து. தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கை உத்தியோக பூர்வமாக தன்னிச்சையாக தமிழீழ சுதந்திர நாடாகப் பிரகடனத்தைச் செய்வதன் மூலம் பிரகடனப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அக்காலப்பகுதியில் இவ்வாறான தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனமோ அல்லது பிரிந்து செல்கின்ற எண்ணமோ தமிழ்த் தலைவர்களிடம் எள்ளளவேனும் இருந்திருக்கவில்லை.

இவ்வாறு 1977 தேர்தலின் பின் தமிழீழத் தேசிய சபையைக் கூட்டுமாறு கேட்கப்பட்ட போதும் கூட்டணித் தலைவர்கள் மறுத்துவிட்டார்கள். அவ்வாறு கூட்டியிருந்தால் 1977களின் இறுதிப்பகுதியில் ஜெ.ஆர்,.ஜெயவர்த்தனா பதவிக்கு வந்து தன்னை இஸ்திரப்படுத்த முன்னர் தமிழீழத்தை சர்வதேச ஆதரவுடன் சட்டரீதியாக நிறுவதற்கான முயற்ச்சிகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் தமிழ் மக்களிடம் தான் விடுதலை உணர்வு மேலோங்கி இருந்ததே தவிர அரசியல்த் தலைவர்களிடம் மேடைப் பேச்சில் மாத்திரமே விடுதலை, சுயநிர்ணயம் என்ற வீராவேச வார்த்தைகள் வந்ததே தவிர உளமார்ந்த தமிழர் சுயநிர்ணய உரிமை. வடகிழக்கில் தமிழர் இறைமை என்பன தொடர்பாக அவர்கள் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. வெறும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்ததுவும் வட்டுக் கோட்டைத் தீர்மானம் காற்றில் பறந்து விட்டது என்றே சொல்லலாம்.

வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஜனநாகத் தேர்தல் மூலம் மக்கள் ஆணையாகப் பெற்றதனால் இதனைப் பயன்படுத்தி தன்னிச்சையான சுதந்திரப் பிரகடணமோ, அல்லது ஐ.நா வரையோ சென்று தமிழர் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு வாய்பினை அக்கால அரசியத் தலைவர்கள் கைநழுவ விட்டுவிட்டார்கள் என்று சொல்வதே பொருத்தமானது. ஆனால் இதன்பின் வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட தேசிய எழுச்சியும்இ தமிழர் சுய நிர்ணயத்தைப் பெறுவதற்கான ஆயுதப் போராட்டத்தின் வேகமான வளர்ச்சியும் தமிழ் மக்கிளிடையே மிகப்பெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திற்று.

1980 களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் வலுவடைந்து செல்ல ஈழத்தமிழர்கள் இராணுவக் கெடுபிடிகளிலிருந்து தப்பி மேற்கு ஐரோப்பிய நாடுகள் நோக்கிப் புலம் பெயரச் செய்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ்க் கல்வி மான்களும்இ தமிழீழ விடுதலை விரும்பிகளும் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர் சமூக அமைப்புக்களை உருவாக்கி தமிழீழ விடுதலைக்கு இவ்சமூக அமைப்புக்களுடாக ஆதரவை வழங்கினர்.

இக்கால கட்டத்தில்தான் முதன்முறையாக இடம்பெயர்ந்த தமிழீழ அரசு பற்றி புலம்பெயர் தமிழர்களினால் பேசப்பட்டது. 1980இஆம் ஆண்டு ஆவணி மாதம் 31ஆம் திகதி லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது என்னவெனில் “1982 தைப்பொங்கல் தினத்தன்று சுதந்திர தமிழீழம் உதயமாகும்.” என முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கிருஷ்ணா வைகுந்தவாசன் 14,11,1981 லண்டன் பிரகடணத்தின் பூர்வாங்கத் திட்டத்தினை வெளியிட்டிருந்தார். “1982 தைப்பொங்கல் தினத்தன்று நாடுகடத்தப்பட்ட நிலையிலான ஒரு தற்காலிக தமிழீழ அரசை பிரகடணப் படுத்துவது அதன்பின் ஐ.நா மூலமும் அவ்அமைப்பின் கீழுள்ள சர்வதேச சட்ட நிறுவனங்கள் வாயிலாகவும் எமது பாரம்பரிய பிரதேசங்களுக்கு சட்ட ஆட்சியுரிமை வேண்டுவது.” என்பது தான் அவ் வெளியீட்டின் சாராம்சமாகும்.

திரு. வைகுந்தவாசன் வெளியிட்ட இடம்பெயர்ந்த தற்காலிக தமிழீழ அரசுப் பிரகடணச் செய்தி அன்றைய நாளில் மிகப் பிரசித்தம் பெற்றிருந்தது. இதனை இந்திய நாளோடுகள்இ இலங்கை நாளோடுகள் தலைப்புச் செய்தியாக்கின. லண்டன் பி.பி.சி தமிழோசை தனது 12,01,1982 செவ்வாய்க்கிழமை இரவு தமது ஒலிபரப்பில் இடம்பெயர்ந்த தமிழீழ சுதந்திரப் பிரகடணம் பற்றி நீண்டதொரு ஆய்வையும், அதன் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் கிருஷ்ணா வைகுந்த வாசன் அவர்களைப் பற்றியும், அவர் 05,10,1978 இல் ஐ.நா. சபைக்குள் புகுந்து தமிழீழ விடுதலைக்குரல் எழுப்பியது பற்றியும் வர்ணிக்கப்பட்டது.

சுதந்திரப் பிரகடணம் பற்றிய அறிக்கை வெளிவந்ததும் இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் மிகத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இதனை முன்னெடுத்துச் சென்ற வைகுந்த வாசன் ஒரு சாமானியரல்ல. அவர் ஈழத்தவர் என்றபோதும் ஸாம்பியா நாட்டில் நீதிபதியாகக் கடமையாற்றி ஓர்வு பெற்றவர். சட்ட நூணுக்கங்களை நன்கு தெரிந்தவர். ஐ.நா.வுக்குள் புகுந்து பேசும் அளவிற்கு திறமையும், நெஞ்சுறுதியும் கொண்டவர். அப்படிப்பட்ட அவருடைய வழிநடத்தலில் இப்பிரகடணம் இடம்பெறலாமென பெரும்பாலானோர் எதிர் பார்த்தனர் ஆனால் இந்திய அரசின் அழுத்தம் ஒரு புறமும், தாயகத்தில் போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இதனை கொள்கையளவில் ஏற்றாலும் சுதந்திரப் பிரகடணத்திற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதனால் இதனை அவசப்பட்டு அமுலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு ஒரு விரிவான அறிக்கையை 1981 இன் கடைசிப்பகுதியில் வெளியிட்டதனால் இவ் இடம் பெயர்ந்த தமிழீழ அரசு அமைக்க எடுத்த முதலாவது முயற்சி கைவிடப்பட்டது.

இவ் இடம்பெயர்ந்த தமிழீழ அரசை நிறுவுவதற்கு லண்டன் ஒருங்கிணைப்புக் குழுவின் முயற்சியை அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பாமைக்கான காரணங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்குழு வெளியிட்ட அறிக்கையானது மிகவும் தெளிவான நீண்ட தூரப் பார்வையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரிமானத்தை தொட்டுக் காட்டியதோடு சுதந்திரப் பிரகடணத்தின் வரலாற்றுத் தேவை அது எப்போது செய்யப்பட வேண்டும்இ யாரால் செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தியிருந்தது. அவ்வறிக்கையின் சாராம்சங்களுடன் தொடர்ந்தும் சந்திப்போம். ….

வன்னியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*