TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சவால்களுடன் உருவாகியுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி

unpஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயல் எதிர்க்கட்சிகள் புதியதொரு கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இந்தப் பெயர் ஒன்றும் புதியதல்ல. 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணியின் பெயர் தான் இது.

நீண்டகாலமாக இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த இந்தக் கூட்டணியின் உருவாக்கம் இப்போது தான் சாத்தியமாகியிருக்கிறது. அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர வெளியேற்றப்பட்ட பின்னர் ஐ.தே.க.வுடன் அவர் கூட்டணி வைத்துக் கொண்டபோது, கருக்கொள்ளத் தொடங்கியதே இந்தக் கூட்டணி. இந்தக் கரு இடையிலேயே கலைந்து விடும் போல பலமுறை அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் எப்படியோ தப்பிப் பிழைத்து இந்தக் கூட்டணி பிறப்பெடுத்து விட்டது. போர்வெற்றி, சிங்கள பௌத்த தேசியவாதம் என்பன போன்ற விடயங்கள் மஹிந்தவுக்குச் சாதகமாக அமைந்து விட்டதால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்துவது இலகுவான காயமாக இருக்காது. இதை உணர்ந்து கொண்ட ரணிலும், மங்கள சமரவீரவும் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க முயன்றனர். ஆனால், அதற்கு அப்போது ஐ.தே.க.வுக்குள் எதிர்ப்பு அதிகமாக இருந்து வந்தது.

கட்சிக்குள் நிலவிய உள்ரண்பாடுகள் ரணிலுக்குப் பெரும் தடையாக இருந்து வந்தது. ஆனால், இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன வரப்போகின்ற நிலையில் ரணிலுடன் ரண்பட்டு நின்ற தலைவர்கள் கசப்புணர்வுகளை மறந்து விட்டு தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதற்கு ஆதரமுடிந்திருக்கிறது. கடந்தவாரம் ஐக்கிய தேசிய ன்னணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்கள் இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இது அரசாங்கத்துக்கு சவாலானதொரு விடயமாக மாறியிருக்கின்றது. இந்தக் கூட்டணி குறித்து அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான கருத்துகள், அரச தரப்புக்கு இருக்கின்ற அச்சத்தை முடிமறைப்பதற்காக வெளியிடப்பட்டது போலவே இருக்கின்றன. இந்தக் கூட்டணியை அமைச்சர்கள் குறைத்து மதிப்பிட்டு கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

“மலையை புரட்ட முனையும் எலிகள்’ என்று கிண்டல் அடித்திருக்கிறார் ஊடகத்துறை அமைச்சர். ஆனால், உள்ளூர அரசாங்கத்துக்கு இந்தக் கூட்டணியால் தலைவலி ஏற்பட்டிருப்பது உண்மை. இதற்குக் காரணங்கள் பலவுண்டு. இப்போது போர் மாயை அகன்று விட்டது. போர் மாயை பற்றியிருந்த காலத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்காக தென்னிலங்கையில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.”எல்லா வீதிகளும் ரோக்கே’ என்பது போல எல்லா வளங்களும் போருக்கே, எல்லோரும் போருக்கே என்று தென்னிலங்கை அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பன அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்காமல் அமைதி காத்தன. ஆனால், இப்போது அப்படியான நிலை இல்லை. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பன நடக்க ஆரம்பித்து விட்டன.

கொழும்பு வீதிகளில் வேலையற்ற பட்டதாரிகள் வேலை தருமாறு கோரியும், தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரியும் போராட்டங்களை நடத்தத் தொடங்கி விட்டனர். பொருளாதார தியான உமைகளுக்கான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்து விட்டன. போரை வென்ற புண்ணியவான் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தாமல் ஒதுங்கியிருந்த காலம் மாறியிருக்கிறது. போர்க் கணக்கு முடிந்து விட்டது. இப்போது அரசியல் கணக்கு ஆரம்பித்துள்ளது. இந்த கள மாற்றத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் தன்மை ஆளும்கட்சிக்கு இருப்பதால், நிச்சயம் எதிர்கால அரசியல் நிலை குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கும். அதைவிட இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே குழப்பங்கள் உருவாகத் தொடங்கி விட்டன.கட்சிக்குள் மஹிந்தவின் இறுக்கமான கட்டுப்பாடு குறித்த கேள்வி எழ ஆரம்பித்து விட்டது.

குடும்ப ஆதிக்கம், மாகாண மட்டத்தில் தலமைஅமைச்சர் பதவிக்காக நடந்த குத்துவெட்டுகள், விருப்பு வாக்குகளுக்கான மோதல், அடுத்த பிரதமர் பதவிக்காக இப்போதே தொடங்கி விட்ட பனிப்போர் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஆளும்கட்சிக்குள் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் அமைச்சர்கள் கூட எதிரணிக்குத் தாவத் துணிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இப்படிப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி ஒன்று உருவாகியிருப்பது அரசாங்கத்துக்கு சவால்மிக்க ஒன்றாகவே இருக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்தவகையில் சவாலாக இருக்கிறதோ அதுபோன்றே அந்தக் கூட்டணிக்குள்ளேயும் முடிவுகளை எடுக்கின்ற போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஏனென்றால் அது ஒன்று இரண்டு கட்சிகளின் கூட்டணி அல்ல. ஐ.தே.க., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஜன நாயக மக்கள் முன்னணி ஆகிய பிரதான கட்சிகளுடன் புதிய சிஹல உறுமய, ஜனநாயக ஐக்கிய தேசிய ன்னணி, தேசிய அபிவிருத்தி ன்னணி, ருகுணு மக்கள் கட்சி, ஜனவிக்தி சஹயோகித பெரன, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய புலமையாளர் சபை போன்ற கட்சிகளும், அமைப்புகளும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன. இப்படிப் பல கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை அமைத்திருப்பது அச்சத்தைக் கொடுத்தாலும், இந்தக் கூட்டணியில் இருந்து ஜே.வி.பி.யும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விலகி நிற்பது அரசாங்கத்துக்குப் பெரும் ஆறுதல் அளிக்கின்ற விடயம். ஐக்கிய தேசிய முன்னணி பத்து அம்சத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயற்படவுள்ளது.

180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பது தான் இதன் பிரதான வேலைத்திட்டம். இதற்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி நாடாளுமன்ற அதிகாரத்தைப் பலப்படுத்தவும், பிரதமருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கும் ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுக்கப் போகிறதாம். அதுபோலவே, தாம் விரும்பும் போது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும், அமைச்சர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களை ஒழிப்பதற்கான சரத் தையும் அரசியலமைப்பில் சேர்ப்பது, அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசியலமைப்பின் முலம் நிர்ணயிப்பது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தகவல்களை அறிந்து கொள்வதற்கான உமை, கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தல், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல், என்று இந்தக் கூட்டணியின் நோக்கங்கள் விந்து செல்கின்றன.

ஆனால் இவையெல்லாம் கோட்பாட்டு தியான கொள்கைகளாக இருந்தாலும் ராஜபக்ஷவின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்பதே பொதுவான வேலைத்திட்டம் என்கின்றன எதிர்க்கட்சிகள். இதை ரணில் விக்கிரமசிங்க தெளிவாகவே கூறியிருக்கிறார். இப்போதைக்கு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றிய கருப்பொருளையே ன்னிலைப்படுத்த ஐக்கிய தேசிய ன்னணி டிவு செய்திருக்கிறது.ஆனால், இந்தக் கூட்டணிக்கு சவால் மிக்க விடயமாக இருப்பது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று தீர்மானிப்பது தான். ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராகக் கொண்ட இந்தக் கூட்டணி வேறொருவரை தமது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் சிக்கல்கள் இருக்கவே செய்யும். அதேவேளை ரணில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற தகவல் களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்குள் தான் ஐ.தே.க. வேட்பாளராகப் போட்டியிடத் தயார் எனத் தெவித்துள்ளார் எஸ்.பி.திஸாநாயக்க. அதேவேளை ஜெனரல் சரத்பொன்சேகாவை வேட்பாளராக்கும் முயற் சிகளும் ஐ.தே.க. தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படுவதாகத் தெகிறது. ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுகிறார் என்ற அடிப்படையில் தான் ஐக்கிய தேசிய முன்னணியால் எதைச் சாதிக்க முடியும் என்று அனுமானிக்க முடியும். சிறுபான்மையினன் ஆதரவு பெற்ற ஒரு வரை வேட்பாளராக நிறுத்த இந்தக் கூட்டணி முனைந்தால் பரந்துபட்ட ஆதரவு இதற்குக் கிடைக்கலாம். ஆனால் அதைவிட்டு விட்டு பெரும்பான்மையினத்தவரின் விருப்பங்களுக்கு தீனி போடும் வேட்பாளரை நிறுத்தினால் இந்தக் கூட்டணியால் ஜனாதிபதி தேர்தலில் மட்டு மன்றி பொதுத் தேர்தலின் போது கூடச் சோபிக்க முடியாது போகலாம்.

-சத்திரியன்

நன்றி:வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*