TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழர்களை பயங்கரவாதிகளாக்கி, அவர்களை மரணப் பொறிக்குள் சிக்கவைக்கும் சிங்கள நீதித்துறை

Makkalநீதிமன்றமும் ஜசீகரனின் வழக்கும், பாதுகாப்பு அமைச்சும்

கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம், பீ.ஜசீகரன், வீ.வளர்மதி குற்றச்சாட்டுகளில் இருந்து முழமையாக விடுதலை செய்தது. இவர்கள் கைதுசெய்யப்பட்டு 500 நாட்களுக்கு மேல் தடுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

இவர்கள் 2008ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர். 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துடன் இணைந்து நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட் என்ற வாராந்த இதழ், அவுட்ரிச் என்ற இணையத்தளத்தை நடத்திச் சென்றமை தொடர்பாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

ஜசீகரன் தனது ஈக்வலிட் பிரஸ் என்ற அச்சகத்தின் ஊடாக இதற்கு உதவினார் என குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. கைதுசெய்யப்பட்டு பல மாதங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜசீகரன் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் சாட்சியமளித்த ஜசீகரன் தான் நன்கு அறியாத சிங்கள மொழியில் தனது வாக்குமூலம் எழுதப்பட்டதாக கூறியிருந்தார். அத்துடன் பயங்கரவாத தடுப்பு பிரிவில் தான் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதல் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தமைக்காக பழிவாங்கும் நோக்கில் தான் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் ஜசீகரன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை அவுட்ரிச் இணையத்தளத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே வளர்மதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜசிகரன் மற்றும் வளர்மதி ஆகியோர் தாம் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அத்துடன் பயங்கவாத தடுப்பு பிரிவில் தான் தாக்கப்பட்டமை தொடர்பான மருத்துவ சாட்சியினையும் ஜசீகரன் தன்வசம் கொண்டிருந்தார்.

ஜசீகரன் மற்றும் வளர்மதி ஆகியோர் கைதுசெய்யப்பட்ட போது, போர்வாத பிரசாரவாதிகள், பயங்கரமான விடுதலைப்புலிகளின் உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில், ஜசீகரன் விடுதலைப்புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவியதாக கட்டுரையொன்று வெளியிடப்பட்டது. (அந்த கட்டுரை இன்னும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது.)

அந்த கட்டுரை இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது, ஜசீகரன் 1973 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லாறு பிரதேசத்தில் பிறந்தார், அவரது தந்தையார் ஒரு கிராம சேவகர், சாதாரண தரம் வரை கல்வி கற்றப் பின்னர் 1993 ஆம் ஆண்டு, புலிகளுக்கு ஆதரவான சரிநிகர் பத்திரிகையில், கணனி இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன் பின்னர் தமிழ் நெட் இணைத்தளத்திற்காக பணியாற்றி வந்தார்.

ஜசீகரன் கைதுசெய்யப்பட்டமையானது ஊடக சுதந்திரத்தை மீறும் செயற்பாடு என உலகத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பொய் பிரசாரத்தின் பின்னனியில் இருந்து செயற்பட்ட நபர், ஜசீகரனின் பயங்கரவாதப் பிரசார கட்டமைப்புடன் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை மூடி மறைத்தார் என பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், ஜசீகரன் கொழும்பில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக செயற்பட்ட பயங்கரவாதி எனவும் கூறியிருந்தது.

அவரது அச்சகத்தை விடுதலைப்புலிகளின் அச்சகம் என்றே பாதுகாப்பு அமைச்சு கூறியது. மேல் நீதிமன்றம் ஜசீகரன் தொடர்பில் தீர்ப்பளிக்கும் முன்னர் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்ட கட்டுரை மூலம் ஜசீகரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மிகவும் ஆபத்தான தீர்மானங்களை எடுத்திருந்தது.

அதேவேளை வளர்மதி தொடர்பாகவும் பாதுகாப்பு தனது இணையத்தளத்தில் இவ்வாறான தகவல்களை வெளியிட்டிருந்தது.

வளர்மதி 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் பிறந்தார். ஜசீகரனின் நிதி முகாமையாளரான அவர், விடுதலைப்புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவி வந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைககழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றுள்ள வளர்மதி இந்தியாவுக்கு சென்று, முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கைதுசெய்யப்படும் போது, அவர் எம்ரிவி,சிரச ஊடக நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கைதுசெய்யப்பட்ட போது, சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவே உலகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

வளர்மதி விடுதலைப் புலிகளினால் முதலிடப்பட்டுள்ள நிறுவனத்தின் பணிப்பாளராவார் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வளர்மதி குறித்து எழுதப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள், போர் காலத்தில் வளர்மதி மற்றும் ஜசீகரன் ஆகியோருக்கு மரணத்தை ஏற்படுத்த கூடிய மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டுகளாக இருந்தன.

இந்த கட்டுரையில் மாத்திரமல்ல, உண்மையான மனித உரிமை பாதுகாவலர்கள் யார் ? என்ற தலைப்பில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையொன்றில், ஜசீகரனும் வளர்மதியும் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் ஆஜரானதற்காக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். விடுதலைப்புலிகளுக்கு உதவும் இவ்வாறானவர்களுக்காக மனித உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வது மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் வளர்மதி மற்றும் ஜசீகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றதால், அவர்கள் கடந்த மாதம் 26 ஆம் திகதி குற்றச்சாட்டுகளில் இருந்து முழமையாக விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு முன்னர், மேல் நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தினர், ஜசீகரன் மற்றும் வளர்மதி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை திரும்ப பெற்றால், தாம் இந்த வழக்கை திரும்பபெற தயார் என கூறியிருந்தனர். இது மிகவும் ஆச்சரியமான சட்டமா அதிபர் திணைக்களமாகும்.

தாம் தாக்கல் செய்துள்ள வழக்கொன்றை திரும்பபெற மற்றுமொரு வழக்கை வாபஸ்பெறக் கோருவது மிகச் சிறந்த பண்பாடாகும். அரசாங்கத்தினால், அதாவது சட்டமா அதிபர் திணைக்களத்தினால், ஜசீகரனையும், வளர்மதியையும் குற்றவாளிகளாக நிரூபிக்க கூடிய சந்தர்ப்பம் இருந்திருக்குமானால், சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறான கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முன்வந்திருக்காது தெளிவான விடயமாகும். வழக்கில் எதுவும் இல்லாததன் காரணமாகவே வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் திரும்பபெற்றுக் கொண்டது.

வழக்கை திரும்ப பெற்றுக் கொண்ட அரசாங்கம், ஜசீகரன் அச்சகத்தின் உரிமையாளரே அன்றி, அவர் பயங்கரவாத சட்டத்திற்கு ஏதுவான குற்றங்களை இழைக்கவில்லை எனவும் இதனால் அவரை விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொண்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தினால் குற்றம்சுமத்தப்பட்டிருந்த, அவரது வாகனத்தை விடுப்பது தொடர்பில் தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் இதுவரை ஜசீகரனினால் வழக்கப்பட்ட சாட்சியம் மாத்திரமே நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கப்பட்டிருந்தாகவும் இதன் அடிப்படையில் இந்த வாக்குமூலம் சுயவிருப்பின் பேரில் வழங்கப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்ட போது, நீதிபதி தெரிவித்திருந்தார். குற்றச்சாட்டை நிரூபிக்க கூடிய சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

குற்றச்சாட்டுகள் இல்லை எனில் சட்ட மா அதிபர் திணைக்களம் அந்த வழக்கை வாபஸ்பெற்றிருக்க வேண்டுமேயன்றி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவுடன் அதனை கோர்த்திருக்க கூடாது.

இதன் காரணமாக அடிப்படை மனித உரிமை என்பது பாதுகாக்கப்பட வேண்டியது. சட்டமா அதிபர் திணைக்களம் அடிப்படை மனித உரிமையை பாதுகாக்க உதவ வேண்டுமே தவிர, அதனை திரும்பபெறுமாறு மறைமுக அச்சுறுத்தலை விடுக்க கூடாது. அது இல்லாவிட்டால் இது என்பது மறைமுகமான எச்சரிக்கையாகும்.

இந்த நிலையில் தமது விடுதலைக்காக 500 நாட்களுக்கு மேல் மீறப்பட்ட தமது மனித உரிமை மீறல்களை பொறுத்து கொள்ள வேண்டி நிர்ப்பந்தம் ஜசீகரன் மற்றும் வளர்மதிக்கு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு என்ன கூறப்போகிறது?.

தமது இணையத்தளத்தின் மூலம் அவப்பெயரை ஏற்படுத்தும் முத்திரை குத்திய செயலுக்காக வருத்தம் தெரிவித்து, கட்டுரையொன்றை வெளியிட்டு இவர்களிடம் மன்னிப்பு கோரப் போகிறதா?.

ஊடக நெறிமுறைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், தம்மால் மற்றவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், உறுதிப்படுத்தப்படாத பொய் முத்திரை குத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளமைக்கான பல உதாரணங்களை முன்வைக்க முடியும்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்காக செயற்பட வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களம், தோற்கும் வழக்கொன்றிக்காக குடிமக்களின் அடிப்படை உரிமைகளை குழப்பியடிக்கும் வகையில் செயற்படுகின்றது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக செயற்பட வேண்டிய பாதுகாப்பு அமைச்சு, தனது இணையத்தளத்தின் மூலமாக அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களை மரண ஆபத்திற்குள் தள்ளுகின்றது. இந்த நிலைமையில் இலங்கையின் சட்ட நிர்வாகத்தை குறித்து எதனை கூறுவது?.

நன்றி சுனந்த தேசப்பிரிய GTN

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*