TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலைப்புலிகள் இயக்கம் செயல் திறன் ஒபாமா

விடுதலைப்புலிகள் இயக்கம் செயல் திறன் அற்றுவிட்டமையால் அவர்களை பயங்கரவாதப்பட்டியிலில் இருந்து நீக்குமாறு அமெரிக்க அரசாங்கத்தைக் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒபாமாவிற்கான தமிழர்கள் வெள்ளி ஜூன் 5 அன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்டன் அவர்களுக்கும், அமெரிக்க தலைவர் ஒபாமாவிற்கும் காங்கிரஸ் செனட் உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதமொன்றில் விடுதலைப்புலிகள் செயலற்றுப் போன இயக்கம் என்பதனாலும், இலங்கை அரசாங்கத்தின் கூற்றின் படி அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும், அமெரிக்காவும் மற்றைய அரசாங்கமும் விடுதலைபுலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கும் படியும் ஒபாமாவிற்கான தமிழர்கள கூறி உள்ளார்கள். மக்களுக்கு உதவி செய்யும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் இருப்பதனால் யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியாமல் இருக்கின்றது.

ஒபாமாவிற்கான தமிழர்களால், விடுதலைப்புலிகள் தற்போது செயலற்று விட்டமையாலும் அவர்களுடன் தொடர்வு கொண்டுள்ளதென கூறப்பட்ட தொண்டு அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டு யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு தொண்டாற்ற அனுமதிக்க வேண்டும் என ஒபாமாவிற்கான தமிழர்களால் கேட்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்டன் அவர்களுக்கும், அமெரிக்க தலைவர் ஒபாமாவிற்கும் காங்கிரஸ் செனட் உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதமொன்றில் விடுதலைப்புலிகள் செயலற்றுப் போன இயக்கம் என்பதனாலும், இலங்கை அரசாங்கத்தின் கூற்றின் படி அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும், அமெரிக்காவும் மற்றைய அரசாங்கமும் விடுதலைபுலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கும் படியும் ஒபாமாவிற்கான தமிழர்கள கூறி உள்ளார்கள்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பிற அமைப்புக்கள் சிலவும் இப்பயங்கரவாதப் பட்டிலில் இருப்பதனால் யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு அவர்களினால் பணியாற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.

ஒபாமாவிற்கான தமிழர்கள், அரசியலில் ஈடுபாட்டைக்கொண்ட அமெரிக்க வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் ஒபாமா அவர்கள் ஜனாதிபதி வேட்பாளாராக நின்ற போதும் தேர்தல் நேரத்திலும் ஒபாமா அவர்களை ஆதரித்து ஈடுபாட்டுடன் பணிற்றியவர்கள். இவர்கள் தற்போது மேற்படி உதவி நிறுவனங்களின் தடை நீக்கம் பற்றி குரல் கொடுத்துள்ளார்கள். ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பின் பேச்சாளர் இதுபற்றி கருத்துக்கூறும் போது, மேற்படி தடையை அமெரிக்க நீக்கும் பட்சத்தில் ஏனைய நாடுகளும் இதனைப் பின்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்டு ஆழிப்பேரலை அவலத்தின் போது தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் செயற் திறன் மற்றும் நடவடிக்கை பற்றி முன்னாள் அமெரிக்க தலைவர்களான கிளிங்டன் மற்றும் ஜோச் புஷ் போன்றோர் அன்று பாராட்டுத் தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
  • santan says:

    ltte is not terrorist they are freedom fighter for tamils.

    September 23, 2010 at 07:15

Your email address will not be published. Required fields are marked *

*