TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முகாமில் இருப்பவர்களும் எனக்குத்தானே ஓட்டுப் போடணும்!

mahi”இங்குள்ளமுதல் இரண்டு முகாம்களும் ஸ்ரீலங்கா அரசாங்கமே அமைத்த தற்காலிகமுகாம்கள்” என்று சொல்லும் பசில் ராஜபக்ஷேவிடம், ”மாணிக் என்றால் என்னஅர்த்தம், ரூபாயா?” என்று விழி விரித்துக் கேள்வி கேட்கிறார் கனிமொழி.”மாணிக் என்பது யாருடைய பெயர்?” தனது சந்தேகத்தைக் கேட்கிறார்திருமாவளவன்.

”இல்லை…மாணிக்கம் என்ற தமிழ் வார்த்தைதான் அது. பல ஆண்டுகளுக்கு முன்னால், அந்தஆற்றில் மாணிக்கக் கற்கள் மிதந்து வந்தனவாம். எனவே, அதைவைத்து மாணிக்என்று பெயர் சூட்டினோம்” என்று விளக்கம் சொல்கிறார் பசில்.

மாணிக்கங்கள்மிதந்து வந்தது உண்மையோ பொய்யோ… ஆனால், மணல்பரப்பில் ரத்தவாடை இன்ன மும்போகவில்லை. ராட்சச கிரேன்களில் பிணங்களை அள்ளி அள்ளி அப்படியே பூமிக்குள்புதைத்ததால், அழுகிய பிணங்கள் ஆவிகளாக மாறி இன்னமும் அலைந்துகொண்டுஇருக்கின்றன. சரியான இடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது இலங்கைஅரசாங்கம்.

”ஐயா! நான் இந்தஇடத்துக்கு வர்றதுக்காக 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தேன். தரையிலகால்வைக்க இடமில்லை. மொத்தமும் பிணங்கள் மேலேதான் கால் வெச்சு வந்தேன். 40ஆயிரம் பேர் செத்திருப்பாங்க கடைசி நாட்கள்ல!” என்று தமிழக எம்.பி-க்கள்குழுவிடம் பெரியவர் ஒருவர் சொல்லும்போது அவர் அழவில்லை. இறுக்கமாகவேஇருந்தார். இனி அவர்களுக்கு கண்ணீர் வடிக்க நீரும் இல்லை. வனாந்திரத்தில்ஏதாவது கருணை பூதம் வந்தால் வரட்டும் என்று கவலையுடன்உட்கார்ந்திருந்தார்கள் ஈழத் தமிழர்கள். சரியாகச் சொன்னால் வெளியாள்மூச்சுக்காற்று அந்த இடத்தில் படுவது இதுவே முதல் முறை. தமிழகஎம்.பி-க்கள்தான் அவர்களைச் சந்திக்கச் சென்ற வெளிப்புறச் சக்திகள்.

Mps1”உங்கள் காலா படணும்?”

மூன்றுலட்சம் தமிழ் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் தமிழகக் குழு ஐந்து மணிநேரம் இருந்தது. அங்கிருந்த மக்களில் பாதிப் பேர் உற்சாகமாகவும், மீதிப்பேர் கோபமாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கனிமொழி,திருமாவளவன் இருவருக்கும் அதிக செல்வாக்கு. ‘இந்தியா நினைத்திருந்தால்இந்தச் சண்டையைத் தடுத்திருக்கலாம்’ என்று ஒருவர் சொன்னபோது, இவர்களால்சரியான பதில் சொல்ல முடியவில்லை. ‘இந்தச் சண்டையையே இந்தியாதான் பின்னால்இருந்து நடத்தியது. அந்த நாட்டுக்காரங்க காலடி இந்த மண்ணில் பட்டுவிட்டதே’என்று ஒருவர் எகிறியதாகவும் தகவல். கருணாநிதியைக் குற்றம் சாட்டியவார்த்தைகளும் இருந்துள்ளன.

‘குடிக்கிறதுக்குத்தண்ணிகூட ஒழுங்கா கொடுக்க மாட்டேங்குறாங்க. இன்னிக்கு நீங்கவர்றீங்கங்கிறதுக்காக நேத்து தண்ணி கொடுத்தாங்க. அஞ்சு லிட்டர், பத்துலிட்டர்னு அளந்து கொடுக்குறாங்க. முந்தி சாப்பாடு அவங்களா கொடுத்தாங்க.இப்ப எங்களைச் சமைக்கச் சொல்றாங்க’ என்று மக்கள் புகார் மழைபொழிந்திருக்கிறார்கள். ‘இந்தியாவைத்தான் நாங்க நம்புறோம். எங்களை எப்பவெளியில் விடுவாங்கன்னு கேட்டுச் சொல்லாம நீங்க போகக் கூடாது’ என்ற கறார்குரல்கள் ஒலித்திருக்கின்றன. ”இந்தியாவுக்குப் போனதும் நாங்க ஏற்பாடுபண்றோம்” என்று எம்.பி-க்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

பிரபாகரன் தப்பினாரா?

அரசியல்ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது இறுதி நாட்களில் என்ன நடந்தது?என்ற கேள்வியை காங்கிரஸ் எம்.பி-யான கே.எஸ்.அழகிரி கேட்டுள்ளார். அப்போதுவந்த பதிலை அழகிரி நம்மிடம் சொன்னார்.

”இரவு12 மணி இருக்கும்… என்னிடம் புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன்தொலைபேசியில் பேசினார். ‘நாம் சமாதானமாகப் போகலாம்’ என்று அவர்கேட்டுக்கொண்டார். ‘இதை நான் மட்டும் முடிவு செய்ய முடியாது.ஜனாதிபதியிடம் கேட்டுச் சொல்வதாகச் சொன்னேன். அவர் பதற்றமாக இருந்தார்.காலையில் நார்வே தூதர் என்னிடம் பேசினார். ‘நாம் பிரச்னையைப் பேசித்தீர்ப்போம்’ என்று அவரும் சொன்னார். இது தொடர்பாக நானும் ஜனாதிபதியிடம்பேசிவைத்திருந்தேன்.

அன்றையதினம் எதிர்பாராதவிதமாகப் புலிகள் மிகக் கடுமையான தாக்குதலைநடத்தினார்கள். இரண்டு வாகனம் நிறைய வெடிமருந்துகள் வெடித்தன. அதனால் அந்தஇடமே பரபரப்பானது. எங்களைப் பொறுத்தவரை ராணுவத்தைத் திசை திருப்ப புலிகள்நடத்திய தாக்குதலாகத்தான் அதைக் கணித்தோம். அந்த இடத்தில் ராணுவத்தின்கவனம் இருக்கும்போது வேறு பகுதி வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்தார்.கடலில் நாங்கள் நான்கு அடுக்குப் பாதுகாப்பு வைத்திருந்தோம். எனவே,பிரபாகரனால் தப்பிக்க முடியவில்லை” என்று பசில் சொன்னதாகச் சொல்கிறார்அழகிரி.

”பிரபாகரன், அவரதுமகன் சார்லஸ் ஆண்டனி இருவரது ரத்தத்தையும் வைத்து டி.என்.ஏ. சோதனையைநடத்திவிட்டதாகவும் சொன்னார். ‘அப்படியானால் இந்தியா கேட்கும் மரணச்சான்றிதழை ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு அவர்சொன்ன பதிலில்தான் தெளிவில்லை” என்கிறார் அழகிரி.

‘மனைவியைச் சுட்டாரா பிரபாகரன்?’

தமிழக எம்.பி-க்களிடம் முகாமில் இருந்த இளைஞர் அதிர்ச்சியான ஒரு தகவலைச்சொல்லி இருக்கிறார்.Mps2”கடைசி நாளில் பிரபாகரனின் பக்கத்தில் வந்தார் அவரது மனைவி மதிவதனி. ‘இந்தப்போர் முடிவுக்கு வரப்போகிறது. எனக்கு சிங்கள ராணுவத்தின் கையில் சிக்கிச்சாக விருப்பம் இல்லை. நீங்களே என்னைக் கொன்றுவிடுங்கள். உங்கள் கையால்சாவதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன்’ என்று சொன்னதை பிரபாகரன்ஏற்கவில்லை. ஆனால், மதிவதனி இதை வலியுறுத்தினார். பிரபாகரனால் அதன் பிறகுஅதைத் தட்ட முடியவில்லை. மதிவதனியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. அவருக்குபிரபாகரனே கொள்ளிவைத்தார்” என்று அந்த இளைஞர் சொன்னாராம்.

இதைபசில் ராஜபக்ஷேவிடம் தூதுக் குழுவினர் சொல்லியபோது அவர் மறுத்தாராம்.”அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால், மதிவதனியின் உடலை நாங்கள்அடையாளம் காண வில்லை” என்றாராம் பசில்.

சனீஸ்வர பாலு!

டி.ஆர்.பாலுவைத்தி.மு.க. வட்டாரத்தில் குனியாத தலைவர் என்று கிண்டலடிப்பார்கள். ‘அண்ணாவேஎதிரே வந்தாலும், அண்ணாந்து பார்த்தபடி நடந்து போவார்’ என்பார்கள்.அப்படிப்பட்டவரை யாழ்ப்பாணத்துப் பத்திரிகையான வலம்புரி ‘சிடுமூஞ்சிசனீஸ்வரர்’ என்று பட்டம் சூட்டியது. இரா.சம்பந்தம் தலைமையிலானஎம்.பி-க்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, சந்திப்புக்கான அடுத்த டீம்வந்தது. உடனேயே இவர்களை கட் பண்ணி அனுப்பிவிட்டாராம். யாழ்ப்பாணம் நூலகக்கலந்துரையாடலை ஆரம்பிக்கும் முன்பே, ‘எங்களுக்கு டைம் இல்லை. சீக்கிரமாச்சொல்லி முடிங்க’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.

முகாமில்சிறைப்பட்டு சமீபத்தில் வெளியேறிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்சந்திப்பின்போதும் கடுப்பைக் காட்ட அவர் தவறவில்லை. ‘ஏங்க… சொன்னதையேசொல்றீங்க’ என்ற எரிச்சலும் காட்டினாராம்.

தோல்விக்கான ஐந்து காரணங்கள்!

”இத்தனைஆண்டுகள் அழிக்க முடியாத அமைப்பாக இருந்த புலிகள், இப்போது தோற்கடிக்கப்படஎன்ன காரணம்?” என்ற கேள்வியை அங்கிருந்த அரசியல் தலைவர்களிடம்கே.எஸ்.அழகிரி கேட்டுள்ளார்.

”இலங்கைமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக அழுத்தமான கருத்துக்களைச்சொன்னார்கள். லட்சக்கணக்கான தமிழ் முஸ்லிம்களை புலிகள் 15 ஆண்டுகளுக்குமுன்பே பகைத்துக்கொண்டார்கள். மிகச் சுத்தமான தமிழ் பேசும் முஸ்லிம்கள்இவர்கள். மற்ற அமைப்புகளுடன் சண்டை செய்யும்போதுகூடக் கிடைக்காதஅவப்பெயர், ராஜீவ் கொலை மூலம் புலிகளுக்குக் கிடைத்தது. மற்ற நாடுகள்இதைப் பயங்கரவாத அமைப்பாகப் பார்க்க ஆரம்பித்தன. கடந்த தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழர்கள் தயாரானபோது, அதைப்பிரபாகரன் தடுத்தார். அது ராஜபக்ஷே ஆட்சியில் அமரக் காரணம் ஆனது.

புலிகள்அமைப்பில் முக்கியமான படைத் தளபதிகளாக கருணா உள்ளிட்ட கிழக்கு மாகாணஆட்கள் இருந்தார்கள். கருணாவின் பிளவுக்குப் பிறகு சில ஆயிரம் புலிகள்அமைப்பைவிட்டு விலகிவிட்டார்கள். கரும்புலிகள் அமைப்பில் அதிகம்இருந்தவர்கள் இவர்கள்தான். இது அமைப்பின் பலவீனத்துக்கு முக்கியமானகாரணம். ஏற்கெனவே இருக்கும் நிலப்பரப்பைவைத்து அதில் ஆட்சி நடத்திக்கொண்டுஅமைதியாகாமல், தமிழர் பகுதிகள் என்று பெரிய நிலப்பரப்பை எதிர்பார்த்துக்காத்திருந்தார் பிரபாகரன் என்று நான் சந்தித்த தலைவர்கள் பட்டியல்போட்டுச் சொல்கிறார்கள்” என்கிறார் அழகிரி.
Mps3
கனிவும் கோபமும்!

அங்கேசென்றது தி.மு.க. கூட்டணி எம்.பி-க்கள் குழு என்றாலும், இதைஒழுங்குபடுத்தியது இந்தியத் தூதரகம். கனிமொழிக்காக பிரத்யேக காரை இவர்கள்கொண்டுவந்து நிறுத்தினார்கள். மற்றவர்களை வேறு வாகனத்தில் அழைத்துச்சென்றார்கள். இதைக் கவனித்த கனிமொழி, தனி கார் வேண்டாம் என மறுத்துள்ளார்.திருமதி சார்லஸ் என்ற அரசாங்க அதிகாரியிடம் டி.ஆர்.பாலு தனது கோபத்தைக்காட்ட, அவர் அழுது துடித்த சம்பவத்தைப் பார்த்து, பாலு மீது வெடித்தாராம்கனிமொழி. ‘நீங்க அவங்ககிட்ட மன்னிப்புக் கேளுங்க’ என்று கட்டாயப்படுத்திப்போராடினாராம்.

எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கேவைச் சந்திக்கச் சென்றபோது, அங்கேஇருந்த இலங்கை எம்.பி. மனோ கணேசன், ‘முகாம்கள் நல்ல நிலைமையில் இருப்பதாகநீங்கள் சொன்னீர்களா?’ என்று கேட்டதும் கோபமான கனிமொழி, ‘நான் அப்படிஎங்கும் சொல்லவில்லை. ஏதாவது பத்திரிகையில் அப்படி வந்திருந்தால், அதுதவறு” என்றதும்தான் மனோ கணேசன் அமைதி ஆனாராம். ‘இவர்கள் அனைவரும் அடுத்தவாரம் முதல் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ என்று பசில்வாக்குறுதி தந்தபோது, ’15 நாட்கள் கழித்து நான் வருவேன். உங்களதுவாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும்’ என்று கிடுக்குப்பிடிபோட்டுத் திரும்பியிருக்கிறார் கனிமொழி.

முடிவானது எப்போது?

‘கருணாநிதியின்முயற்சியால்தான் முகாமில் இருந்த தமிழர்கள் விடுவிக்கப்பட்டார்கள்’ என்றுஇங்கு பிரசாரம் செய்யப்படுவதுபற்றி கொழும்புப் பத்திரிகையாளர்கள்மத்தியில் கேட்டால், அவர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

”இரண்டரைலட்சம் தமிழர்கள் முகாமில் இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் சொல்கிறது.இதில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேரிடம் முழுமையான சோதனைகளை நடத்திமுடித்துவிட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் அறிவித்தது. இதில்அரசாங்க வேலையில் இருந்தவர்கள், பணம் வைத்திருப்பவர்கள், தொழில்செய்பவர்களை முதல்கட்டமாக வெளியில் அனுப்பலாம் என்று முடிவெடுத்தார்கள்.அங்கு உள்ள வங்கியில் 21 ஆயிரம் குடும்பங்கள் தங்களது கணக்குகளைத் தொடங்கிஉள்ளன. இவர்களை முதல்கட்டமாக அக்டோபர் முதல் வாரத்தில் அவர்களதுவீடுகளுக்கு அனுப்பலாம் என்று அரசு முடிவெடுத்தது. இந்தியத் தூதுக் குழுவர இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், அதைத் தாமதப்படுத்தினார்கள் என்பதுதான்உண்மை” என்கிறார்கள்.

தனதுநடவடிக்கைக்கான உண்மையான காரணத்தை தமிழக எம்.பி – க்களிடம் வெளிப்படையாகச்சொல்லி இருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே. ”இங்கே தேர்தல் வரப்போகிறது.ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடக்கப்போகின்றன. தமிழர்களும்எனக்குத்தானே ஓட்டுப் போட வேண்டும்? பிறகு எப்படி அவர்களை நிரந்தமாகமுகாம்களில் நான் வைத்திருப்பேன்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார்.

இந்தியாவுக்குத்தான் இனி ஆபத்து!

தமிழகஎம்.பி-க்கள் குழுவுக்குக் கிடைத்த அதிர்ச்சியான செய்தி இதுதான்.கொழும்பில் வர்த்தகம் செய்யும் பெரும் தொழிலதிபர்கள் கூட்டாக வந்துஇவர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது, ”சமீபகாலமாக பல்லாயிரம் கோடித்திட்டங்களை இங்கு கொண்டுவந்து சீனா குவித்திருக்கிறது. பத்தாயிரம்கோடிக்கான திட்டத்துக்குக் கூடுதலாக இரண்டாயிரம் கோடிகளைத் தருகிறார்கள்.ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல் பணம் பாய்கிறது.இங்குள்ள தனியார்களுக்கும் நிறையக் கடன் தருகிறார்கள். சினிமா எடுப்பதில்ஆரம்பித்து சீனாவின் முதலீடு இல்லாத துறையே இப்போது இலங்கையில் இல்லை.தமிழர் வாழும் பகுதி மொத்தமாக சீனாவின் கைக்குத்தான் போகப்போகிறது. எனவே,இந்தியா இதில் கவனமாக இல்லாவிட்டால் ஆபத்து இந்தியாவுக்குத்தான்” என்றுஇந்த வர்த்தகப் பிரமுகர்கள் சொல்லிஇருக்கிறார்கள்.

நம் கையை வைத்து நம்முடைய கண்ணைக் குத்திக்கொண்டோமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லக் காத்திருக்கிறது காலம்!

நன்றி: தெனாலி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*