TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தனுஷ்கோடி: நடுக்கடலில் 30 மணி நேரம் தவித்த இலங்கை அகதிகள்

தனுஷ்கோடி 3 ம் தீடையில் 5 அகதிகள் பரிதவித்தனர். 30 மணி நேரத்துக்குப் பின், புதன்கிழமை காலை அவர்கள் மீட்கப்பட்டனர்.

மன்னார், மட்டகளப்பைச் சேர்ந்த இன்பநாதன் (20), நிரேஷரோஸ் (17), தம்பதியான உமா சங்கர் (22), தமயந்தி (20) மற்றும் கமல்ஹாசன் (32) ஆகிய 5 பேரும், இலங்கை பேச்சாலை கரையில் இருந்து, ஜூன் 15 ம் தேதி படகில் புறப்பட்டனர். ஜூன் 16 அதிகாலை 5 மணிக்கு, தனுஷ்கோடி 3 ம் தீடையில் அவர்கள் இறக்கி விடப்பட்டனர்.

சுமார் 30 மணி நேரம் கழித்து, ஜூன் 17 ம் தேதி காலை 10 மணிக்கு தீடையில் தவித்த அகதிகளை இந்தியக் கடற்படையினர் மீட்டனர்.

சூறாவளிக் காற்றால் 3 ம் தீடையில் கடல்நீர் சூழ்ந்த நிலையில், உணவு, குடிநீர் இன்றி பகல், இரவு முழுவதும் நடுங்கிக் கொண்டே இருந்ததால், அகதிகள் சோர்வுடன் காணப்பட்டனர்.

அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்திய கடற்படையினர், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*