TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கையில் சட்டவிரோத கொலைகள், நிறுத்தப்படவேண்டும்: அமெரிக்கா

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதுவர் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நலன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தூதுவரான பெட்ரீசியா புட்டேனஸ் அமெரிக்க செனட் உறுதிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்றப்போதே இவற்றைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சட்டவிரோத கொலைகளையும், ஊடகங்கள் மீதான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதே அமெரிக்கா விடுக்கக்கூடிய பிரதான செய்தியாகும் என புட்டினஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தமது சொந்த நாட்டில் தமக்கு எதிர்காலம் இருப்பதை உணரும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

அதேநேரம் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரீசியா புட்டேனஸ் தெரிவித்துள்ளார்.

புட்டேனஸ் ஏற்கனவே பங்களாதேஸிற்கான உதவி அதிகாரியாகவும், பின்னர் பங்களாதேஸிற்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*