TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை அகதி முகாம்களில் தினமும் 30 பேர் மாயம்: மனித உரிமை ஆணையம்

இலங்கையில் போரின் போது வெளியேறிய மக்களை பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்க வில்லை. ராணுவத்தினர் முகாமுக்குள் நுழைந்து அத்து மீறல்கள் செய்கின்றனர்.

இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

அகதி முகாம்களில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்து செல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளோடு, தொடர்பு உள்ளவர்கள் என்று கூறி அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்புவது இல்லை. அவர்கள் என்ன கதி ஆகிறார்கள் என்றும் தெரியவில்லை.

முகாம்களில் தங்கி இருப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு செல்வதால் ஆட்கள் காணாமல் போவதை தடுக்க முடியவில்லை.

எனவே முகாம்களில் யார் யார்? இருக்கிறார்கள்? என்பது பற்றி முறையாக பதிவுகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*