TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கலங்காதே தமிழ் இனமே; அதுவரை கடமையை செய்; அண்ணன் இட்ட கட்டளையை செய்

annaகட்டுரைகள், முக்கிய செய்திகள் – மின்னஞ்சல், விசேட செய்தி நான் தமிழீழத்திலிருந்து அதன் கலாச்சார நகராம் யாழ்ப்பாணத்திலிருந்து இம்மடலை எழுதுகின்றேன். ஏறக்குறை 38 வருடங்கள் இம்மண்ணிலேயே வாழ்ந்தவன் – வாழந்து கொண்டிருப்பவன் என்ற உரிமையில் புலம் பெயர் மக்களிடமும் எம் தாய்த் தமிழ் ஈழ மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடமும் ஒரு வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம் என் நினைக்கின்றேன்.

மிகப்பெரும் கசப்பான தமிழன் ஒரு கணம் கூட சிந்தித்திருக்கா சம்பவங்கள் நடைபெற்று 150 நாட்களின் பின்னர் கூட என்போன்ற உங்களைப் போல இனம் பற்றி ஒரு கணமேனும் சிந்திக்கின்ற தமிழர்களால் மீண்டெழ முடியவில்லை என்பதுதான் உண்மை.

நான் ஆயுதம் எடுத்து போராடவில்லை. போராட்டத்தை தள்ளி நின்று பார்த்தவன். ஆனால் ஆயுதப் போராட்டம் மூலம் எமக்கொரு விடிவு கிடைக்கும் என்று நம்பியவன். ஆனால் நடந்தவை யாவுமே நெடுமூச்சிற்குரியதாக நடந்து முடிந்துவிட்டன. அவற்றைப் பற்றி விவாதிக்க நாம் வரவில்லை.

உலகத்தமிழர்களின் மில்லியன் டொலர் கேள்வி என்வென்றால் “எங்கள் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்” உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதே. எங்கள் தலைவன் இறந்ததாய் அறிவிக்கப்பட்டது இதுதான் முதல்தடவை அல்ல என்பதும் ஒவ்வொருமுறையும் அவர் மீண்டும் பலம்கொண்டு எழுந்து வந்திருக்கின்றார் என்றெல்லாம் வாதங்கள் வருகின்றன.

என் அன்பான தமிழினமே….!

உங்கள் முன்னால் இன்று விரிந்துள்ள மிகப்பெரிய பொறுப்பு “நலன்புரி முகாமில்” வாடும் மக்களை மீட்பதும் தமிழர் உரிமைகளைப் பெற உலகளாவிய வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதே. அதைவிடுத்து தலைவர் இருக்கிறாரா? தளபதிகள் உள்ளார்களா என்ற ஆராச்சியில் இருப்பது அல்ல.

தலைவர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவரே பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதே எனது கேள்வி? என்னினியவர்களே! நாங்கள் தமிழ் மொழியை பேசினாலும் வணங்கும் தெய்வங்கள் பலாவாறாக இருக்கின்றன.

சிலர் சிவனையும், சிலர் யேசுவையும், சிலர் அல்லாவையும் சிலர் விஷ்ணுவையும் வணங்குகிறார்கள். யாராவது மேற்கண்ட தெய்வங்கள் யாரையேனும் கண்ணால் கண்டதுண்டா? அல்லது ஏதாவது தெய்வங்களுடன் உரையாடியது உண்டா? இல்லை கண்ணால் காணாத கடவுளுக்கே நாம் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து காவடி எடுத்து பூசைகள் செய்கின்றோம்.

அதுபோலவே எங்கள் தலைவனும். ஒரு யேசுவாக, ஒரு முருகனாக ஒரு விஷ்ணுவாக ஈழ மண்ணில் அவதாரம் செய்தவர் அவர். அவதாரங்களுக்கு அழிவே இல்லை. அவர் கண்ணில் தென்படாதபோது கூட நீங்களெல்லாம் அவரை நேசிக்கிறீர்களே இதுதான் பக்தி. எப்படி ஒரு தெய்வத்தை நாம் காணாமலே பூசித்து பக்தி மார்க்கத்தை தழுவி நிற்கிறோமோ. அது போலவே எங்கள் ஈழ தெய்வம் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களுக்கும் அழிவு இல்லை.

எங்கள் மனங்களில் வேர்விட்டு ஆழ ஊடுருவி வாழந்து கொண்டிருக்கும் எங்கள் அண்ணன் விரைவில் கண்களிலும் காடம்சி தருவார்.

கலங்காதே தமிழ் இனமே.
அதுவரை கடமையை செய்.
அண்ணன் இட்ட கட்டளையை செய்.
இதுவே இந்த யாழ்ப்பாணத்து தமிழனின் வேண்டுதல்.

எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.

இந்த முறையும் அதுவே நடக்கும்.

அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.

தமிழா நீ எழுந்தாயே ஒரு தாயின் விதையாக

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • latha says:

    அண்ணன் நம் இனத்திற்காக தன் கடமையைநன்றாகவே செய்திருந்தார் நம் கடமையை நாம் திறம்பட செய்து முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் நாம் மக்களின் கண்ணிரை மாற்றுவதே நாம் தலையாய கடமை.நம்
    மனங்களில் நம் அண்ணன் இருக்கையில் அவனிற்கு அழிவில்லை.

    October 12, 2009 at 22:48

Your email address will not be published. Required fields are marked *

*