TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழன் துன்புறுவதை கணிக்க, தெலுங்கு தலைமையில் இலங்கை செல்லும் இந்திய நா குழு

Kaniவவுனியா அகதிகள் முகாமில் தங்கி துன்புற்று மனித வதைக்கு உட்பட்டுள்ள வன்னி மக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தூதுக்குழு ஐந்து நாள் பயணமாக இன்று நண்பகல் கொழும்புக்கு செல்லவுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.ஆர். பாலுவின் தலைமையில் செல்லும் தூதுக்குழுவில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த பத்து எம்.பிக்கள் அங்கம் வகிப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு போய் சேரும் இந்தியக் தூதுக்குழுவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, கனிமொழி, மு.க.அழகிரி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், ஹெலன் டேவிட்சன் ஆகியோரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூன் ரசீத் ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல்.திருமாவளவன் ஆகியோரும் அங்கம் வகிப்பர்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, தூதுக்குழுவில் ஆளும் தரப்பைச் சேர்ந்த தமிழக எம்.பிக்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கின்றனர். தமிழக முதல்வர் இந்த குழுவை நேற்று தனது கோபாலபுரம் வீட்டிற்க்கு தனியே அழைத்து, நடக்க வேண்டிய முறைகள் குறித்து விவரமாய் சொல்லி அனுப்பியுள்ளார். – முதலில் நாம் யோசிக்க வேண்டியதே, ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குழு சரி வருமா? – முதலில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு செல்லும் என பேசப்பட்டு, பின்னர் ஏன் டி.ஆர்.பாலுவின் தலைமை கொண்டுவரப்பட்டது.

– காங்கிரசை சேர்ந்தவர்கள், தனது தலைமை அமைப்பே இலங்கை செய்தது சரி என்று கூறி வரும் நேரத்தில், இந்த குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரசார் எந்த வகையில் நடுநிலையாக தங்களது கருத்துக்களை எடுக்க இயலும்? – அதேபோல், விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் திருமாவளவன், இந்திய அரசுக்கு எல்லா வகையிலும் ஆதரவை தெரிவித்து வருபவர். ஏன் சில தினங்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தபோதும் கூட, அவர் ஒரு ஜி.டி.வி என்ற தொலைக்காட்சியில் நேரிலையிலேயே இவ்வாறு கூறியாதால், ஈழத்தமிழர்கள் நேரிலை என்றும் பாராமல், துரோகி என்று சம்மட்டி அடி கொடுத்து அனுப்பினார்கள்.

அவர் எவ்வாறு, இந்தியாவிற்கோ அல்லது கலைஞருக்கு எதிராக இப்போது பேச முடியும். – முதல்வரின் மகள் என்று தன்னைக் கூறிக் கொண்டு இருக்கும் கனிமொழியும், டெல்லி வட்டாரத்தோடு இணைக்கமாயும், தமிழர்கள் மேல் அன்பு கொண்டுள்ளது போல் இருந்து கொண்டு இருப்பவர். அவரும், அதேபோல், மதுரை மகனான மு.க.அழகிரி மத்திய அமைச்சராயும், ஆங்கலம் கூட தெரியததனால், ஒன்று டெல்லியிலேயே செய்ய முடியாமல் இருந்து கொண்டு, ஆனால் பணத்தை மட்டும் சேர்த்துக் கொண்டிருக்கும் இவருக்கும் எப்படி முள்வேலி கம்பிக்கு பின் உள்ளவர்களின் நிலைமை கண்ணுக்கு தெரியப் போகிறது.

– மற்றபடி மீதமிருக்கும் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும், மனதில் உண்மையான உணர்வு இருந்த போதும், கலைஞருக்கு எதிராக பேச முடியாத மெளனிகலாகவே இருக்கப் போகின்றனர். இப்படிப்பட்ட குழுவினால் இலங்கைத் தமிழனுக்கு என்ன செய்து விட முடியும். அத்தோடு, இக்குழுவை வழி நடத்திச் செல்லும் டி.ஆர்.பாலு ஒரு இலங்கை அரசின் அபிமானி. சூயஸ் கால்வாய் கனவில், சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து, பல கோடி ரூபாய்களை சுருட்டி கொண்டு, இலங்கை அரசையும் பேச சம்மதிக்க வைத்து, இன்றைய வரைக்கும் அந்த கால்வாய் என்ன நிலையில் இருக்கிறது என்று தனக்கும், மக்களுக்கும் தெரியாத நிலையில் இருந்து வரும் 7 கப்பலுக்கு சொந்தக்காரரும், அத்தோடு பல தொழில் நிறுவனங்களை வழிநடத்தில் செல்பவரும், கல்லூரிகளை கொண்டு இயங்கி வருபவருமான டி.ஆர்.பாலு எப்படி தமிழன் நலனில் அக்கரை எடுத்துக் கொண்டு செயல்படுவார்.

அத்தோடு அவர் சென்ற முறை மத்திய மந்திரியாக இருந்த போது, இலங்கை அரசின் உயர் பிரதிநிதிகளுடன் கொஞ்சி குலாவிக் கொண்டும் பல விருந்துகளில் பங்கெடுத்துக் கொண்டிருந்த இந்த டி.ஆர்.பாலுவை எப்படி நம்ப முடியும். (இவரைப் போல் பலர் டெல்லியில் நடத்திய கூத்து எல்லோருக்கும் தெரியும். மணிசங்கர் அய்யர் என்றொருவரும் இருந்தார். ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அடித்த காற்றில் கரைந்து போனார்) இப்படிப் பட்டவரை ஏன் கலைஞர் தலைமை வகிக்கச் சொன்னார்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.

டி.ஆர்.பாலுக்கு இருந்து வரும் பல தொழில்களில் கலைஞரின் குடும்பத்தினரும் பங்குதாரர்களாய் இருந்து வருவதும், அத்தோடு ‘மனவாடு’ (தெலுங்கில் – நம்முடைய சொந்தம்), மொழியால் தெலுங்கு பேசி வரும் திராவிடர் என்ற பற்றுதலுமே, தெலுங்கரான கலைஞர், இவரை தலைமைக்கு தேர்வு செய்துள்ளார். தெலுங்கு பேசி தமிழகத்து மக்களை ஏமாற்றி கோடிக்கனக்கான ரூபாய்களை சேர்த்துக் கொண்டு இருந்து வரும் இந்த திராவிடம் பேசி வரும் டி.ஆர்.பாலுவை எப்படி, நமது தமிழினத்துக்கு நல்லது நினைப்பார்.

இவருக்கு ஏதாவது வியாபாரம் இலங்கையில் தமிழ் பகுதியில் கிடைக்குமா? என்பது குறித்து மட்டுமே குறியாய் கொண்டு இருப்பார் என்பதுதான் நிச்சயம். கலைஞரின் இராசதந்திரத்தால், ஒரே கல்லில் இரு கனிகளை அடிக்க நினைத்துக் கொண்டு இலங்கைப் பயணத்தை செயல்படுத்துகிறார்.

ஒன்று, இந்த நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம், கலைஞர் குடும்பத்திற்கு லாபம் தரும் பயணமாகவே அமையும். உள்நாட்டில் இத்தனை நாட்கள் சம்பாதித்து வந்த குடும்பம், இனி வெளிநாட்டிலும் எப்படி வியாபாரத்தைப் பெருக்கலாம் என கணக்கு போடும்.

இரண்டு, உலகத் தமிழினத்தின் மீது தனக்கு மிகுந்த அக்கரை உள்ளவரைப் போல் அடுத்த சினிமாவை நமக்கு காட்டி அதிலும் தமிழ் மக்கள் மனதை கொள்ளையடிக்கப் பார்க்கிறார். இறுதியாக, மேற்சொன்ன இரண்டு செயல் பாட்டிலும், இவரின் குறிக்கோள் கொள்ளையடிப்பதுதான்.

வீரத்தமிழ் மகன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*