TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ராஜபக்சே விருந்தினராக போகிறார்கள்

Mahinda”இலங்கைக்குச் செல்லும் தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் விருந்தினராகத்தான் அங்கு செல்கிறார்கள்” என்று பா.ம.க. நிறுவனர் ச.ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது..” இலங்கைக்கு தமிழக எம்.பி.க்கள் குழு செல்வதாக கூறுகிறார்கள் அதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மட்டும்தான் உள்ளார்.

ராஜபக்சே கருணாநிதியை அழைத்ததினால் தி.மு.க. கூட்டணிக்கட்சியனர் மட்டும் செல்வதாக கனிமொழிகூறுகிறார். கருணாநிதி தமிழக முதல்வர் தமிழக முதல்வருக்கு இலங்கை அதிபர் கடிதம் எழுதினார் என்றால் அவர் உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைகூட்டி இலங்கை செல்லாமா என்று கேட்டிருக்க வேண்டாமா? தமிழக முதல்வர் என்பதால்தானே ராஜபக்சே அவருக்கு அழைப்பு விடுத்தார் அப்போது அனைத்துகட்சியினர் பிரதிநிதித்துவம் இன்றி குழுவை அனுப்புகிறார்.

அதுவும் ராஜபக்சேவின் விருந்தினராக செல்லிரார்கள். இந்திய தூதரில் விருந்தினராக செல்வதுதானே முறை அங்க அவர்கள் என்ன பார்க்கப்போகிறார்கள், என்ன செய்தியை அறிக்கையாக தரப்போகிறார்கள் என்பதெல்லாம் பெரிய கேள்விகள். இலங்கையில் வவுனியாவில் மட்டும் 30 முகாம்கள் உள்ளன.

மறுவாழ்வுத்துறை அமைச்சர் ரிசார்ட் பவுதின் வழிகாட்டலில் மானிக்பார்ம் முகாமையும், யாழ்ப்பாணத்தில் டக்லஸ் தேவானந்தா கட்டுப்பாட்டில் உள்ள முகாம் என 2 முகாம்களை மட்டுமே பார்க்கப்போகிறார்கள். தொண்டு நிறுவனங்களையோ, உலக பத்திரிக்கையாளர்களையோ அனுமதிக்காத இலங்கை இவர்களை எதை காட்டிவிட போகிறார்கள், எந்த உண்மையையும் இவர்கள் கொண்டுவரப்போவதில்லை.”என்றார் ராமதாஸ்.

நன்றி: தெனாலி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*