TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆளில்லா வேவு விமானம் இரணைமடுவை அண்டிய பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது: வான்புலிகளின் சாதனை

SearcherMK2கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னி வான்பரப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று வான்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறீலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த பொழுது கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னியில் தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்கியதாக முன்னர் சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது.

எனினும், 2005ஆம் ஆண்டில் இரணைமடுவை அண்டிய பகுதிகளில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை, பிறிதொரு விமானம் ஒன்றின் சகிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் சுட்டு வீழ்த்தியதாக தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலிய தயாரிப்பான தமது வான்படையின் சேர்ச்சர் மார்க் – 2 ரக ஆளில்லா வேவு விமானத்தை நடுவானில் விமானம் ஒன்றின் சகிதம் இடைமறித்த வான்புலிகள், தாக்குதல் சுடுகலன் ஒன்றைப் பயன்படுத்தி அதன் மீது குறிசூட்டுத் தாக்குதலை நிகழ்த்தி சுட்டு வீழ்த்தியதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SearcherMK2

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag: ,

Your email address will not be published. Required fields are marked *

*