TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் பெயர்களை வைத்து நிதிசேகரிக்கும் மோசடி

Makkalவன்னியில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் பெயர்களை வைத்து நிதிசேகரிக்கும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். வன்னியில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு சிறீலங்காவில் பல தொண்டு நிறுவனங்கள் மதம்சார் சபைகள், தனியார் நிறுவனங்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்கள் சிறீலங்காவில் மாத்திரமல்ல பன்னாடுகளிலும் தமிழர்வாழ் இடங்களிலும் பெருமளவு நிதியினை திரட்டுகின்றார்கள். இந்த நிதி தடுப்பு முகாமில் உள்ள தமிழ்மக்களை சென்றடைவதில்லை. இன்னிலையில்தான் இவ் அமைப்புக்கள் தடுப்பு முகாமில் உள்ள தமிழ்மக்களின் பெயர்களை சொல்லி நிதிதிரட்டுகின்றார்கள்.

அண்மையில் யாழ்குடாநட்டில் நிதிசேகரித்த இந்து அமைப்புக்கள் ஒன்றியம் கடந்த 8ம் மாதம் மட்டும் 3 இலட்சத்தி ஐம்பத்தொன்பதாயிரம் ரூபா தொகையினை மக்களிடம் இருந்து சேகரித்தார்கள். இந்து அமைப்புக்களின் இவ்வாறான செயற்பாட்டிற்கு ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் துணைபோகின்றார் என்பது தமிழ்மக்களுக்கு தெரிந்தவிடையமே.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*