TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரித்தானியாவின் ஆளும் கட்சி மாநாட்டில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் போர்க்கொடி!

mcdonaghமூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள சிறீலங்கா அரசுக்கு பிரித்தானிய மக்களின் பணம் சென்றடையக் கூடாது என்று ஆளும் தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிபோன் மக்டொனா அம்மையார் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:
“Marks & Spencer நிறுவனத்தில் ஒரு உள்ளாடையையோ, Next நிறுவனத்தில் மேலங்கியையோ அடுத்த தடவை நீங்கள் கொள்வனவு செய்யும் பொழுது, அல்லது இந்தியாவின் கடலோரத்தை அண்டியுள்ள அழகிய தீவிற்கு வாழ்நாள் பெறுமதிமிக்க விடுமுறையாக நீங்கள் செல்லும் பொழுது, மூன்று இலட்சம் மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள ஒரு அரசாங்கத்திற்கு உங்கள் பணம் சென்றடைய வேண்டும் என்று உண்மையில் நீங்கள் விரும்புகின்றீர்களா?

செய்தியாளராகக் கடமையாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடு அது.

இளம் ஆண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் மிகவும் குறுகிய வீச்செல்லைக்குள் சுடப்படுவதை சணல் -4 தொலைக்காட்சிச் செய்தியில் நாம் பார்க்கக்கூடிய நாடு அது.

எமது பணத்திற்கும், சனநாயகத்திற்கும் இதனையா நாம் நாடி நிற்கின்றோம்?

உங்கள் பணத்தை தயவு செய்து சரியாகப் பயன்படுத்துங்கள்.

அந்த அரசாங்கத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள்.”

இவ்வாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் அம்மையார் கூறிய பொழுது, அவையில் அமர்ந்திருந்த அனைவரும் கரவொலி எழுப்பித் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*