TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடுப்பு முகாம்களில் அதிகளவான தற்கொலை முயற்சிகள்! வவுனியா மருத்துவமனை புள்ளிவிபரம்

Vanni Makkalதடுப்பு முகாம்களில் இருந்தே அதிகளவான தற்கொலை முயற்சிகள் நடைபெற்று வருவதாக வவுனியா மருத்துவமனை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் தற்கொலைக்கு முயற்சிப்போர் தொகை அதிகரித்து காணப்படுவதாக வவுனியா பொது மருத்துவமனையினால் புள்ளிவிபர ரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக தடுப்பு முகாம்களில் உள்ள மக்களே பெருமளவு தற்கொலைக்கு முயற்சிக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலப் பகுதியில் மட்டும் தாண்டிக்குளம், பிரமண்டு வித்தியாலய தடுப்பு முகாமில் இருந்து 10க்கு மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தார்கள் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதால் காப்பாற்றபட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்தோர் எண்ணிக்கை 195 பேராகவும் 2008 ஆம் ஆண்டு 102 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என்றும் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு அதிகப்படியான தற்கொலை முயற்சிகள் வேப்பங்குளம், சிதம்பரபுரம், செட்டிகுளம் போன்ற பிரதேசங்களில் இருந்தே பதிவாகியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*