TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சேர்பியர்களை காத்த ஐக்கிய நாடுகள் சபை ஏன் தமிழர்களை காக்க தவறியது: அமெரிக்க மருத்துவர் எலின் சந்தர்

Makkalசேர்பியர்களை காத்த ஐக்கிய நாடுகள் சபை ஏன் தமிழர்களை காக்க தவறியது அமெரிக்க மருத்துவர் எலின் சந்தர் வேதனை அளித்துள்ளார்.

இந்தியாவின் டில்லியில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தான கருத்தமர்வு ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் இருந்து கொண்டு நேரடியாக காணொளியில் பேசிய மருத்துவர் எலின்சந்தர் விலங்குகளை அடைத்து வைத்தது போல் தமிழ்மக்களை முகாம்களுக்குள் வனவிலங்கு கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளார்கள்.

அடுத்த மாதம் வரப்போகும் பருவமழையில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆழிப்பேரலைத் தாக்கத்தில் இலங்கையில் தமிழர்கள் வாழ் இடங்களை நான்சென்று பார்வையிட்டுள்ளேன்.

அப்போது அவர்களின் அன்பினை நான் நேரடியாக கண்டேன். இவ்வாறான தமிழ்மக்கள் இன்று உடமைகளை இழந்து தவிக்கிறார்கள். முள்வேலிக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள், தண்ணீர்வசதி, கழிப்பறைவசதி இல்லாமல் அல்லல்படுகிறார்கள், சுகாதாரமற்றசூளலில் வாழ்கிறார்கள், பலநோய்களில் மக்கள் உயிரிழக்கின்றார்கள், மூன்றரைலட்சம் மக்களுக்கு 50 மருத்துவர்கள் தான் காணப்படுகிறார்கள்.

அங்குள்ள நிலமைகளை அறிய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை இந்நிலையில் தமிழ்மக்கள் வாழந்து கொண்டிருக்கிறார்கள். பொஸ்னியாவில் சேர்பியர்களை காப்பாற்ற ஜக்கியநாடுகள் சபை உடன் இறங்கியது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது யாருமே கண்டுகொள்ளவில்லை. ஜக்கியநாடுகள் சபையினை செயல்படவிடாமல் ஒரு சில நாடுகள் செய்துவிட்டன.

தமிழ்மக்கள் பிரச்சனையில் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுநாடுகள் கவனம் செலுத்த வேண்டும இலங்கை அரசின் போர்குற்றங்களுக்கு பன்னாடு தண்டனை வழங்கவேண்டும் என்றும்’ மருத்துவர் எலின் சந்தர் கருத்துரைத்தார்.

டெல்லி ஜவஹர்லால் கல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இலங்கைத்தமிழர் விவகாரம் குறித்த கருத்தரங்கு இந்திய இஸ்லாமிய மையஅரங்கில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உரைநிகழ்த்தினார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*