TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதிக்குள் செல்லக்கூடாது: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை தலைமன்னார் கடற் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒன்பது மீனவர்கள் மற்றும் இரண்டு படகை இலங்கை அரசு ஜூன் 15 ம் தேதி விடுவிப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு நாட்களுக்குப்பின் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையொட்டி துறைமுக டோக்கன் அலுவலகத்தில் மீன்துறை அதிகாரிகளால் 700 க்கும் மேற்பட்ட படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.

கடற்கரை அந்தோணியார் ஆலயம் முன் கூடிய மீனவர் சங்க பிரதிநிதிகள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதிக்குள் மீனவர்கள் செல்வதை தவிர்க்கவும்’ கேட்டுக்கொண்டனர். இதை தொடர்ந்து,” ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதிக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து சில நாட்களுக்கு முன் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை வந்துள்ள நிலையில் இறால் மீன் பிடிக்கும் ஆசையில் எச்சரிக்கையை மீறி தலைமன்னார் கடல் பகுதிக்குள் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*