TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலிகளின் பன்னாட்டு வலையமைப்பை சிதைக்க சிறீலங்கா முயற்சி


தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலை சிதைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் அலுவலகங்களில் கைப்பற்றட்ட ஆவணங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்துவரும், சிறீலங்கா அரசின் புலனாய்வுப் பிரிவினர், அவற்றைக் கொண்டு வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளில் இயங்கும் சிறீலங்கா அரசின் தூதரகங்கள் கடந்த சில வருடங்களாக தமது வழமையான பணியை ஒத்தி வைத்துவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரப்புரைகளிலும், வெளிநாட்டில் விடுதலைப் புலிகளை முடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்திருந்தன.

இந்த செயற்பாட்டை விரிவுபடுத்தி வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்களையும், அதன் வலைப் பின்னலையும் சிதைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு தற்பொழுது ஈடுபட்டுள்ளது.

இதற்கான அறிவுறுத்தல் தூதரங்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், தூதரகப் பதவிகளில் சில சிறப்பு நியமனங்களும் இடம்பெற்று வருகின்றன. பரப்புரைக்கு ஏதுவாக வெளிநாடுகளிலுள்ள மேற்குலக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் விலைக்கு வாங்குவது அரசின் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனின் ஈவினிங் ஸ்ரான்டட் பத்திரிகையில் “அமர் சிங்” என்ற செய்தியாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது துணைவியார் அடேல் அம்மையார் பற்றி எழுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*