TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அதற்குள் விற்பனையான மிஷ்கின் படம்

missஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்தே விட்டார் மிஷ்கின். இந்த படம் வெளிவந்து பெரிய ஹிட் என்று பெயர் வாங்குகிற வரைக்கும் வாயை திறப்பதில்லை என்ற முடிவிலிருக்கிறாராம் அவர். ஏன்? இவரது முகமூடி வெளிவந்த முதல் ஷோவே தன் தலையெழுத்தை அறிவித்துவிட்டது. இதை அறிந்த உதவி இயக்குனர்கள் பலர் மிஷ்கினுக்கு மொட்டை கடுதாசி போட ஆரம்பித்துவிட்டார்களாம்.

சுய இன்பம் அனுபவிக்கற நேரத்துல நாலு புக்கு நல்ல புக்கா படிங்க என்று ஒரு முறை மிஷ்கின் தனது பேட்டியில் கூறியிருந்தார். உதவி இயக்குனர்களின் அறிவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குதான் இப்படியொரு பதில். இதில் ஆவேசமானவர்கள் இவரை இயக்குனர் சங்கத்திற்கே நேரில் வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள். முகமூடி நேரத்தில் தங்கள் ஆத்திரத்தை இவர்கள் போனிலும், ஆள் முகவரியில்லாத கடிதத்திலும் காட்ட, நம்ம மேல இவ்வளவு ஆத்திரத்தில் இருக்காங்களா என்ற அதிர்ந்தே போனார் மிஷ்கின்.

அந்த நேரத்தில் எடுத்த முடிவுதான் இது. அவர் நினைத்த மாதிரியே படம் நன்றாக வந்திருக்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த ஒரு விநியோகஸ்தர், முழு படத்தையும் பணம் கொடுத்து வாங்குவதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றாலும் கூட, மிஷ்கினின் வாய்ப்பூட்டுக்கு அவரே சாவி தேட மாட்டார் என்று நம்பலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*