TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சினேகன் – சினேகா – ஸ்ரேயா நடிக்கும் ’இராஜராஜ சோழனின் போர்வாள்’!

snehaயோகி திரைப்படத்தில் வில்லனாகவும், உயர்திரு 420 திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்த கவிஞர் சினேகன் நடிப்பில் இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படம் உருவாகிறது.

இந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் இராஜராஜ சோழன் கதாபாத்திரத்திலும், இன்னொரு இந்தி நடிகர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இந்த வரலாற்றுத் திரைப்படத்தில் இவர்களைத் தவிர நடிகைகள் சினேகா, ஸ்ரேயா, நாட்டி ஆகியோரும் நடிக்கிறார்களாம். பழங்கால வரலாற்றுத் திரைப்படமான இராஜராஜ சோழனின் போர்வாள் திரைபப்டத்திற்கு இளையராஜா தான் இசையமைக்கிறார்.

வழக்கம்போல ஸ்டூடியோவிலோ, வெளிநாட்டிலோ கம்போஸ் செய்யாமல் மக்கள் முன்னிலையில் இத்திரைப்படத்திற்கான கம்போஸிங் நடைபெறவிருக்கிறது.

இராஜராஜ சோழ மாமன்னரின் குருவான சித்தர் கருவூரார் ஜீவசமாதி அடைந்ததாய் கூறப்படும் கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் மக்கள் முன்பு 11.09.13 அன்று இளையராஜா மெட்டமைத்து இத்திரைப்படத்தை துவங்கிவைக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*