TamilSpy

பொழுது போக்கு இணையம்…

’தலைவா’ திரைப்படம் முழுவதும் கற்பனையே – விஜய்!

vijayதலைவா திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகள் அனைத்தும், விஜய்யின் அடக்கமான முறையீட்டால் நீக்கப்பட்டு ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்பட்டது. ரிலீஸான ஒரு வாரத்தில் பல கோடி ரூபாய்களை தலைவா வசூல் செய்துவிட்டாலும் சில தீர்க்காத கணக்குகள் அப்படியே இருந்துவந்தன.

தலைவா திரைப்படத்தின் கதை தனது தந்தையின் கதை என எஸ்.கே.ராமசாமி நீதிமன்றத்திடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வழக்கைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குனர் விஜய் “ தலைவா திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையான ஒன்று. இதில் சம்மந்தப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் எனது படைப்பு.

எஸ்.கே.ராமசாமி ’ என் தந்தையின் கதை தான் தலைவா’ என்கிறார். தலைவா திரைப்படத்தின் முதல் பாகம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ஆனால் எஸ்.கே.ராமசாமியின் தந்தை ஆஸ்திரேலியா சென்றதாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தலைவா திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய சீனும் ஏற்கனவே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்பது தான் ரசிகர்களின் கருத்து. இத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்கும் தலைவா டீமை அதைச் சொல்லி வேறு கஷ்டப்படுத்த வேண்டுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*