TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலைப்புலிகளை தடைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை: அவுஸ்திரேலியா


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யும் திட்டமெதுவும் இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

புலிகளை தடை செய்வது குறிதது டிசம்பர் மாதம் அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் உட்பட்ட அரச அதிகாரிகளால் ஆராயப்பட்டதாகவும், பின்னர் தடை செய்யத் தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டதாகவும் தகல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளமையை கருத்திற்கொண்டு, அவ்வியக்கத்தை தடை செய்வது தொடர்பான பரிசீலினை கைவிடப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் இம் முடிவு தொடர்பாக சிறீலங்கா அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படும் போது அவர்கள் மீள உயிர் பெறலாம் என அவுஸ்திரேலியாவுக்கான சிறீலங்காத் தூதர் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*