TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முகாமில் சிக்கியிருப்பது தற்கொலைக்கு சமம்! முகாமை விட்டு அழைத்துச் செல்லப்பட்டால் படுகொலை பயம்: முருகேச பூபதி

Murukesuதமிழர் என்றபடியால் நாங்கள் தமிழ்ர் முகாம்களுக்குள் சொல்ல சிறீலங்காப் படையினர் அனுமதிக்கவில்லை என்று இந்தியவேளான் துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழுக்கு வழங்கிய கருத்தில்அவர் இதனை தெரிவித்துள்ளா்.

“இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி நமக்கு வரும் செய்திகள் நூற்றுக்கு நூறு உண்மைதான். அங்கே உள்ள தமிழர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வாழ்வதற்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

வவுனியாவில் உள்ள ஐ.டி.பி. முகாமான “மனிக்பார்ம்” முகாமுக்கு நாங்கள் போனபோது, அந்த முகாமில் மட்டும் 78 ஆயிரம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்று எங்களுக்குச் சொன்னார்கள். அங்கே போவதற்கான அனுமதி எங்களுக்கு முறைப்படி இருந்தபோதும், முகாமுக்குள் மருத்துவர் திவாரியை மட்டும்தான் அனுமதித்தார்கள்.

தமிழர்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ எங்களை வெளியிலேயே நிறுத்திவிட்டார்கள். வெளியிலிருந்து பார்த்தபோதே அந்த முகாமில் இருக்கும் தமிழர்களின் நிலை நன்றாகத் தெரிந்தது. அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில், நிம்மதியற்ற நிலையிலே அந்த முகாமில் தமிழர்கள் இருந்தார்கள்.

அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, குறைந்தபட்ச மனித உரிமைகளுடன் அங்குள்ள தமிழர்கள் வாழவேண்டுமென்றால் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு எப்போதாவதுதான் உணவு வழங்கப்படுகிறது. குடிக்க, குளிக்க எல்லாவற்றுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு. அங்கு நிலவும் ஆரோக்கியமற்ற சூழல்கள் குறித்து படங்களுடன் செய்திகள் வெளியாகிவிட்டன. நடமாட்டம் கூட கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐ.டி.பி. முகாமுக்கு வெளியே நின்றிருந்த நேரத்தில், முகாமில் பணிபுரிபவர்ளிடம் பேச முடிந்தது. அவர்கள் சொன்ன தகவல்கள் பேரதிர்ச்சியாய் இருந்தது. “இங்குள்ள தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இவர்களுக்கு சிங்கள அரசாங்கத்தினர் நல்லது செய்யவேமாட்டார்கள். 6 மாதத்திற்குள் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்போம் என அரசாங்கம் சொல்லியிருந்தது.

ஆனால் 3 மாதங்களாகியும் அதற்கான நடவடிக்கைகள் வேகம் பெறவில்லை. எல்லா முகாம்களிலும் இதே நிலைமைதான். சொந்த மண்ணில் குடியமர்த்துகிறோம் என்று இந்த முகாமிலிருந்து 20 ஆயிரம் பேரை மட்டும் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்கள் எங்கே குடியமர்த்தப்பட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்களின் கதி என்னவானது என்று தெரியவில்லை.

முகாமில் சிக்கியிருப்பது தற்கொலைக்கு சமம். முகாமை விட்டு அழைத்துச் செல்லப்பட்டால் படுகொலை பயம். முள்வேலி கம்பிகளுக்கிடையே தமிழர்களின் வாழ்க்கை இப்படித்தான் சிக்கியிருக்கிறது என்றார்கள்; கடந்த ஜூலை 23-ந்தேதி டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களை சொந்த நிலங்களில் குடியமர்த்தவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டியே எங்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டது.

மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஜி.எஸ்.வி.திவாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு கடந்த 15-ந்தேதி இலங்கைக்கு கிளம்பியது. இத்திட்டத்தினுடைய ஆலோசகரும் ராஜபக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சேவிடம் இத்திட்டம் குறித்துப் பேசினோம். அதற்கடுத்து அக்ரிகல்ச்சர் மினிஸ்டர் ஹேமகுமாரா நானயக்கராவின் மூலம் வவுனியா பகுதியில் 5 இலட்சம் ஏக்கரில் அரிசி, கத்தரி வகைகளைப் பயிரிட நிலங்களைப் பார்வையிட்டோம்.

தமிழர்களுக்கு நல்லது செய்யவே மத்திய அரசும், மாநில அரசும் முயன்று கொண்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை போகாததற்கு எதிர்கருத்துக்கள் இருப்பதை அவர் விரும்பவில்லை” என்றவரிடம், “தமிழ் உணர்வாளரான அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் உதவியாளராக இருந்த நீங்களும் தீவிர தமிழ் உணர்வாளர். நீங்கள் எப்படி இந்த இலங்கைப் பயணத்திற்கு சம்மதித்தீர்கள்” என்றோம்.

“நான் ஒரு தமிழ் உணர்வாளர் என்பதற்காகத் தான் மத்திய அரசினுடைய உத்தரவை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நான் ஒரு தமிழ் உணர்வாளர் என்பதை விட தமிழ் உணர்வாளர் அல்லாதவர்கள் யாரும் அங்கே போய் விடுவார்களோ என்ற அச்சம்தான் என்னை அங்கே போக வைத்தது.

ஆனால் அங்கே குடியமர்த்தப்படுவதற்காக இந்திய அரசு கொடுக்கும் 500 கோடி ரூபாயை சிங்களர்களிடத்தில் பணமாகக் கொடுத்தால் நிச்சயம் தமிழர்களைச் சென்று சேராது என்பதால்தான் தமிழனான நான் அவர்களுக்கு பணமாகக் கொடுக்கக்கூடாது.

பொருட்களாகவே கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதனாலேயே அந்த இலங்கைப் பயணத்தை தொடர்ந்தேன் என்றார் இலங்கை முகாமில் உள்ள தமிழக நிலையை நேரில் கண்டுஇ கேட்டு வந்திருக்கும் துணைவேந்தர் முருகேச பூபதி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*