TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சுவிசில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் “தமிழினம் அடிமையா? அகதியா? அழிந்துவிடுமா? உன்னுடைய கடைமை என்ன ?”


அன்பான சுக் வாழ் தமிழ் உறகளே!!!

தாயகத்தில் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் உறவுகளை காப்பற்றக் கோரி சுக் நகரில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் 5 கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுக் கையளிப்பும் நடைபெறவுள்ளது.

துயர்களையும் சோர்வுகளையும் மறந்து எம்மின விடுதலைக்காக எம் தேசியத் தலைமையின் கீழ் தொடரப்படவிருக்கும் அரசியல்நகர்வுக்கு சுக் மானிலத்தில் அனைவரும் திரண்டு அத்திவாரமிடுவோம் என அனைவரையும் அழைக்கிறார்கள் சுக் தமிழ் இளையோர் அமைப்பினர்.

மேலும், அவர்கள் அனைத்து மக்களும் முடிந்தவரையில் கறுப்புடையில் சழூகமளிக்கவும் எனக் கேட்டுக் கொள்கின்றனர்.

தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சுவிஸ் அரசாங்கம் சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தற்பொழுது தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள்மீது குறிப்பாக இளைஞர்கள்; யுவதிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலைகள் ஆள் கடத்தல்கள் பாலியல் துன்பியல்கள், அடிப்படை மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்கு சுவிஸ் அரசாங்கம் சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சர்வதேச தொண்டுநிறுவனங்கள் ஊடகவியலாளர்களை தடுப்பு முகாங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் சுதந்திரமாகச் சென்றுவர அனுமதிக்குமாறு சுவிஸ் அரசாங்கம் சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக நீதிமன்றத்தில் சுவிஸ் அரசாங்கம் முறையிட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறீ லங்கா மீதான அழுத்தத்தை பிரயோகித்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சுக் மானில அரசு சுவிஸ் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: Landsgemeindeplatz

காலம்: 17.06.2009 புதன்கிழமை பிற்பகல் 14.00 மணி

தொடர்புகளுக்கு:

078 897 44 45 (குரு), 078 305 96 60 (டனு), 041 712 23 91 (சுதாகர்), 079 375 04 32 (அருண்)

மின்னஞ்சல்: [email protected]

இணையத்தள முகவரி: www.tjvz.org

சரியாக 15.10 மணியளவில் Landsgemeindeplatz இல் இருந்நு சுக் மாநில நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்துச் சென்று சுக் மாநில அரச அதிபர் Rolf Iten இடம் மனு கையளிக்கப்படும்.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு – இரண்டு பட்டால் இருண்ட வாழ்வு”

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*