TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சினேகா கர்பம்! பிரசன்னா விளக்கம்

snehaநடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் சினேகா. சினிமாவில் தொடர்ந்து நடிப்பதை தான் கணவர் பிரசன்னாவும் விரும்புவதாக பேட்டிகளில் கூறியிருந்தார் சினேகா.

இப்போதைக்கு தமிழில் இரண்டு படங்களும் தெலுங்கில் இரண்டு படங்களும் சினேகாவின் கைவசம் உள்ளது. சேரன் இயக்கும் ஒரு படத்திலும் பிரகாஷ் ராஜ் இயக்கும் ஒரு படத்திலும் நடித்துவருகிறார் சினேகா.

திருமணமாகி ஒரு வருடம் முடிவடைய உள்ள நேரத்தில் சினேகா கர்பமாக இருக்கிறார் என்ற செய்தி பரவிவந்தது. இதை அறிந்த பலபேர் சினேகாவுக்கு வாழ்த்து செய்திகளை சொல்லிவருகின்றனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார் பிரசன்னா.

இது பற்றி பிரசன்னா தெரிவிக்கையில், ’சினேகா கர்ப்பமாக இருப்பதாக தவறான தகவல் பரவி உள்ளது. இதனால் நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர் கர்ப்பமாக இல்லை’ என்றார்.

சினேகாவின் அக்காவும் இதை மறுத்துள்ளார். அவர் கூறும் போது சினேகாவுக்கு உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுவதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைத்துள்ளார். பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் தற்போது நடிக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார் என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*