TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடுப்பு முகாம்களில் விரைவில் பாரிய மனிதப் பேரவலம்: தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை

Vanniதடுப்பு முகாம்களில் பாரிய மனிதப் பேரவலம் ஏற்படக் கூடும் என்று அங்கு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மக்களைப் பாதுகாப்பதற்கு காத்திரமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு சிறீலங்காவை வலியுறுத்துமாறு தொண்டு நிறுவனங்களால், ஐக்கிய நாடுகளுக்கான சிறீலங்காக் கிளைப் பொறுப்பாளர் நீல் பூனேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இயங்கி வரும் 17 முக்கிய தொண்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள 2 இலட்சத்து 60 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ஒப்பீட்டளவில் லேசான மழை பெய்த போதிலும் நான்கு தடுப்பு முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டது எனவும், எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக் கூடும் எனவும் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உறவினர்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோருக்கு சந்தர்ப்பம் அளித்தல், மீள் குடியேற்றுதல் போன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் மக்கள் சுதந்திரமாக இடம் நகர்வதற்கான உரிமை உறுதிப்படுத்த வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களைத் தம்முடன் தங்க வைத்துக் கொள்ள விரும்பும் உறவினர்களுக்குச் சரியான முறையில் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

குறிப்பாக மெனிக் பாம் தடு்ப்பு முகாமில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தொண்டு நிறுவனங்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*