TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சம்மதிக்காத சமந்தா! ஆர்யா சமாதானம்!

aryainsideவேட்டை படத்தில் துவங்கிய ஆர்யாவின் ’கிஸ்’ சேட்டை, ’சேட்டை’ படம் வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. வேட்டை படத்தில் ஆர்யா-அமலாபால் இணைந்து அடித்த லிப்-லாக் கிஸ் ஆர்யாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஆர்யா நடித்திருக்கும் ‘சேட்டை’ படத்திலும் இரண்டு ஹீரோயின்களுக்கும் கிஸ் அடித்திருக்கிறாராம்.

அஞ்சலி, ஹன்ஸிகா என திரையுலகின் பரபரப்பான இரண்டு ஹாட் நடிகைகளுக்கும் ஆர்யா கிஸ் அடித்திருப்பது படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்துவிட்டது. ‘கடி’ காமெடியும், லிப்-லாக் கிஸ்ஸும் நன்றாக வேலை செய்வதை உணர்ந்த ஆர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக லிப்-லாக் முத்தக்காட்சி இருக்க வேண்டும் என்று கூறிவிடுகிறாராம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம்.

அந்த விதத்தில் சமீபத்தில் கதை சொன்ன இயக்குனர் மகிழ் திருமேனியிடமும் இதே நிபந்தனையை வைத்திருக்கிறார் ஆர்யா. தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் பேசிய போது கதையையும் முத்த காட்சியையும் பற்றி சமந்தாவிடம் கூறியிருக்கிறார் மகிழ் திருமேனி. படத்தின் கதைக்கும் லிப்-லாக் முத்தத்திற்கும் சம்மந்தமே இல்லையே என சமந்தா கேள்வி கேட்க அது ஆர்யாவுக்காக சேர்க்கப்பட்டது என சொல்லிவிட்டார் மகிழ் திருமேனி.

கதைக்காகத் தான் நான் நடிப்பேன் மற்றவர் விருப்பத்திற்கெல்லாம் நடிக்கமுடியாது என சமந்தா கூறிவிட்டாராம். கிஸ் சீன் இல்லாத படத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசித்து வருகிறதாம் ஆர்யா தரப்பு. ஆர்யாவின் ‘கிஸ்’ சேட்டை இப்படி புஸ்ஸ்ஸ்ஸ் என்று போய்விட்டதே.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*