TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேசியத்தலைவரின் புகைப்படத்தை வைத்த பெ.தி.க நிர்வாகி கைது

Annaiபெரியாருடன் பிரபாகரன் இருப்பது போன்ற படம் வைத்த பெரியார் திராவிட கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

பெரியார் பிறந்த நாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. பெரியார் சிலை அமைந்துள்ள பன்னீர்ச்செல்வம் பூங்காவில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் தேச பொதுவுடைமை இயக்கம் சார்பில் பெரியாருடன் விடுதலைப்புலிகள் தலை வர் பிரபாகரன் இருப்பது போன்ற பெரிய கட்அவுட் வைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

Anna

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், எம்எல்ஏ விடியல் சேகர் உட்பட காங்கிரசார் மறியல் செய்தனர். இதையடுத்து கட் அவுட் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் குமரகுருபரன்(42) மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News

Your email address will not be published. Required fields are marked *

*