TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சந்திரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும்: கோத்தபாய

Gothapaya-rajpakksaமுன்னாள் அதிபர் சந்திரிகா இந்நாட்டுக்கும் அரசுக்கும் எதிரான சதி முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று அமைச்சர் யாப்பா தெரிவித்திருக்கின்றார். “சமீபத்தில் கேரளா சென்ற சந்திரிகா, இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்துவிட்டாலும் பயப்பீதி இன்னமும் இருக்கத்தான் செய்கின்றது என்றும், தமது உயிருக்கே அங்கு பாதுகாப் பில்லை என்றும் கூறியிருந்தார்.

முன்னாள் அதிபர் சந்திரிக்கா தெரிவித்துள்ள இந்தக் கருத்து நாட்டுக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் சதி நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே பார்க்க வேண்டும்” என்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார். ஓர் அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பைவிட 12 மடங்கு அதிக பாதுகாப்பு முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் தனதுகட்சி ஆட்சி நடத்தும் இலங்கையில் தனது உயிருக்கே பாதுகாப்பில்லை என அவர் கேரளாவில் தெரிவித்துள்ள கருத்து அடிப்படை ஆதாரமற்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

முன்னாள் அதிபர் என்ற வகையில் 80 இற்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள், 12 வாகனங்கள், 08 சாரதிகள் எனப் பலத்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் கேரளாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது ஏதோ ஓர் அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே கருதுகிறேன். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை முறையாகப் பயன்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் பொறுப்பற்ற விதத்தில் வெளிநாடுகளில் கருத்து தெரிவிப்பது மிகவும் கவலைக்குரியது என்றார்.

இறுதியாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி சந்திரிக்காவின் இக்கூற்றினால் ஆத்திரம் அடைந்துள்ள கோத்தபாய, அவரின் பாதுகாப்பு குறித்த விடயங்களை மீள் பரிசீலனை செய்யுமாறும், பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*