TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சுவிஸ் பேர்ன் நாடளுமன்றம் முன்பாக “உண்மைக்காய் எழுவோம் 2”

Unmaikai Ezhuvom 224.10.2009 அன்று சுவிஸில் உண்மைக்காய் எழுவோம் 2. எனும் மாபெரும் எழுச்சி நிகழ்வு. 10.09.2009 முதல் 24.10.2009 வரை தமிழத் தேசிய எழுச்சிப்பிரகடணம். தமிழீழ அத்தியாயம் இரணர்டு ஆரம்பம்.

சுவிஸில் புத்துயிர் பெறும் வரலாறு காணத
தமிழ் இளையோர் எழுச்சியும் தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலைக்கான புரட்சியும்.

மிகப் பிரமாண்டமான முறையில் வருகின்ற ஒக்டோபர் மாதம் 24 ம் திகதி மாலை 15. மணிக்கு சுவிஸ் பேர்ன் நாடளுமன்றம் முன்பாக உண்மைக்காய் எழுவோம் 2. தமிழீழ அத்தியாயம் 2. ஆரம்பம் எனும் மாபெரும் எழுச்சி நிகழ்வு சுவிஸ் தமிழ் இளையோர்களாள் ஏற்பாடாகியுள்ளது. நீண்ட இடைவெளியின் பின் தம்மைச் சரிவரக் கட்டமைத்து புத்துயிர் பெற்று விடுதலைக்கான வீச்சுடன் தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம் என்ற வாக்கியத்துடன் இளம் சமுதாயம் விடுதலைக் களத்தில் குதிக்கிறது.

முன்பொருமுறை இதே சுவிஸ் மண்ணில் இதே நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடந்தேறிய உன்மைக்காய் எழுவோம் என்ற இளையோர்களின் எழுகை சர்வதேசமெங்கும் முளங்கிய இளையோர்களின் போராட்டங்களுக்கெல்லாம் தாய்ப் போராட்டமாகா உருப்பெற்றது.

மீண்டும் அதே உத்வேகத்துடன் அதெ நாடாளுமன்றச் சதுக்கத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடாகியுள்ள இந் நிகழ்வானது தமிழீழ விடதலைப் போராட்டம் சார்ந்து தமிழீழ மக்களின் நிலைப்பாட்டையும் குறிப்பாகத் தமிழ் இளையோர்ளகின் நிலைப்பாட்டையும் சுவிஸ் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துரைக்கவுள்ளது. அதே சமயம் அன்புக்குரிய எமது அசைக்கமுடியாத பலமாக விளங்கும் தமிழீழ மக்கள் ஆகிய உங்களுக்கு எமது விடுதலைலை வென்றெடுப்பதற்கான எமது அடுத்தகட்ட நகர்வின் கொள்கை விளக்கமளிப்பையும் முன்மொழியவுள்ளது.

எமது நேசத்துக்குரிய தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்து வீரத்தலைன் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் இளையோர்கலே!!! ஏமக்காக மடிந்த மாவீரர்களைச் சிந்தியுங்கள். அங்கு மண்ணோடு மண்ணாகிப்போன உங்கள் இரத்த உறவுகளை எண்ணுங்கள். வதை முகாங்களில் வதை;கப்படும் உங்கள் உறவுகளை நேங்சில்த் தாங்குங்கள். பறிபோன எமது தாய்நிலத்துக்காய் ஏங்குங்கள். விடுதலைக்கான பாதையில் பேதங்களை மறந்து உடனே குதியுங்கள்.

அதிர்வலைகளை ஏற்படுத்தக் காத்திருக்கும் இந் நிகழ்வையொட்டி இன்று 10.09.2009 முதல் 26.10.2009 வரை தமிழ்த் தேசிய எழுச்சி நாட்கலாக நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். சுவிஸின் அனைத்துப் பகுதியிலும் உள்ள பொது அமைப்புக்களை அப்; பகுதிகளில் உயிர்த்தெழுந்து உண்மைக்காய் எழும் தமிழ்த் தெசியத்தை வலுப்படுத்தும் வகையில் உன்மைக்காய் எழுவோம் 2 எனும் குறியீட்டுடன் கவனயீப்புக்களை முன்னெடுக்குமாறும் உரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்.

முற்றுப் பெற்று விட்டது „தமிழீழ விடுதலைப் போராட்டம்’ என்று கொக்கரிக்கும் பலரின் பகல்க்கனவை உன்மைக்காய் எழுவோம் 2 பொடிப்பொடியாக்கட்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் வரலாறாகவிருக்கும் இந் நிகழ்வில் உங்கள் பிள்ளைகள் ஆகிய எம்முடன் தோழோடு தோழ் நின்று உழைக்குமாறு தாழ்மைடன் வேண்டி நிக்கிறோம்.

TYO

விழ விழ எழுவோம்
விரைவினில் நிமிர்வோம்
தடைகளை உடைப்போம்
தமிழீழம் அமைப்போம்

இலக்கை அடையும் வரை நாம் உண்மைக்காய் எழுவதைத் தடுக்கமுடியாது.

தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News
  • g.valangovan says:

    tamileelam thanitamileelame thirvu voice of tiger

    September 20, 2009 at 17:24

Your email address will not be published. Required fields are marked *

*