TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலையில் முக்கிய பங்காற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

seemannஇன்று இனம் மிகப் பெரிய நெருக்கடியிலும் எதிரிகளின் முற்றுகையிலும் சிக்கித் தவிக்கிறது. தாயக விடுதலைக்குப் போரிட்ட எம் தமிழ்ச் சொந்தங்கள் சொல்லொணாத் துயரத்திலும் இருக்கின்றனர். தாய்த் தமிழ்ச் சொந்தங்கள் தங்கள் தாய் நாட்டிலேயே சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் முள்வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அவலம்.

ஆனாலும் இன்னும் உலகின் கவனம் நம் மீது திரும்ப மறுக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் செயலற்ற போக்குத்தான். ஊடகங்கள் விருப்பு வெறுப்பற்றும் துணிச்சலாகவும் உண்மைநிலையை உலகுக்கு எடுத்துச் சென்றிருந்தால் இன்று இந்த இழிநிலை ஏற்பட்டிருக்காது. தாயக விடுதலையில் ஊடகங்கள் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகும்.

அதற்கு ஈழமுரசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இனம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் பொழுது எத்தனையோ ஊடகங்கள் பாதை தவறிய பொழுதும் தொடர்ச்சியாக இனத்தின் விடுதலை குறித்து கொண்ட இலட்சியத்தில் மாறாது அது பயணிக்கிறது. ஈழமுரசு போன்ற நிறைய இதழ்கள் உருவானால் தான் இந்த குருட்டு உலகின் கண்கள் திறக்கும்.

நம் இனமும் விரைவில் விடுதலை அடையும். அத்தகைய நிகழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் நோக்கில் புதிதாகத் துவங்கும் ‘ஊடக இல்லம்’ முக்கிய பங்கினை ஆற்றும் என்று கருதுகிறேன.

ஆகவே எதிர்வரும் 2 ஆம் திகதி பிரான்சில் துவங்க இருக்கும் ஊடக இல்லம் சிறப்பாக செயல் படவும், நம் இன விடுதலையில் முக்கிய பங்காற்றவும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பன்,
சீமான்,
நாம் தமிழர் இயக்கம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*